இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் நியமனம்

இவர் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியவர் ஆவார். இதுவரை இந்திய அணியின் பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த கேரி கிர்ஸ்டனுக்குப் பதிலாக பிளட்சர் பணியாற்றவுள்ளார்.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் கூறுகையில், 2 ஆண்டு காலத்திற்குப் பயிற்சியாளராக பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங், முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ஆண்டி பிளவர் ஆகியோரும் பயிற்சியாளர் போட்டியில் இருந்தனர். இருப்பினும் பிளட்சருக்கு அந்த வாய்ப்பு போயுள்ளது.
அதேசமயம், பிளட்சரின் பெயரை கிர்ஸ்டன்தான் பரிந்துரைத்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 4ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்த போட்டித் தொடருக்கு முன்பாகவே இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் கிடைத்துள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications