Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியிடம் கற்று கொண்ட ஒரு பாடம்.. இந்தியாவுக்கு எதிராக திரும்பும் ஆபத்து.. பிரிட்டோரியஸ் சுளிர்

டெல்லி:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியிடம் கற்று கொண்ட பாடம், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை என்று தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த பிரிட்டோரியஸ், தற்போது இந்திய அணிக்கு எதிரான தென்னாப்பிரக்க தொடரில் இடம்பெற்றுள்ளார்.

தற்போது டெல்லியில் தென்னாப்பிரிக்க அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் பிளேயிங் லெவனில் பிரிட்டோரியஸ் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி ஸ்டைல்

தோனி ஸ்டைல்

தோனி எப்போதுமே அவரை நம்புவார். அனைத்துமே எந்த சூழ்நிலையிலும் சாத்தியம் என்று தோனி இருப்பார். மூன்று பந்துக்கு 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் பந்துவீச்சாளர்களாக நீங்கள் தோற்கலாம். ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு அப்போதும் வாய்ப்பு இருக்கும் என நம்புபவர் தான் தோனி. அதற்காக பதற்றம் அடையவும் மாட்டார். அனைத்தையும் அவர் தலையில் சுமத்தி கொள்ள மாட்டார்.

புரிய வைத்தார்

புரிய வைத்தார்

தோனியிடம் இருந்து நான் கற்று கொண்ட அம்சமே களத்தில் அவர் எப்படி அமைதியாக செயல்படுகிறார் என்பதை தான். அவர் மீது இருக்கும் அழுத்தத்தை பந்துவீச்சாளர்களுக்கு மாற்றிவிடுவார் தோனி. இறுதிக் கட்டத்தில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் நெருக்கடியும், அழுத்தமும் அதிகம் என்று தோனி எனக்கு புரிய வைத்துள்ளார்.

சிஎஸ்கே அனுபவம்

சிஎஸ்கே அனுபவம்

இதை தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பின்பற்ற போகிறேன். களத்தில் அமைதியாக நின்று தன்னம்பிக்கையுடன் இருந்தால், போட்டியை எந்த சூழலிலும் வெல்லலாம். சிஎஸ்கே அணியில் விளையாடிய அனுபவம் நிச்சயம் எனக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் கைக் கொடுக்கும். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை, அது அனுபவமிக்க அணி.

சிஎஸ்கே அடுத்த சீசன்

சிஎஸ்கே அடுத்த சீசன்

கிரிக்கெட்டில் எப்போதுமே முடிவு நமக்கு சாதகமாக இருக்காது என்பதை அறிந்த வீரர்கள் உள்ளனர். நடந்து முடிந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்த நல்ல விஷயங்களை மட்டும் பார்க்க வேண்டும். பலமான எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.அடுத்த 3 சீசனுக்கு ஒரு தரமான அணியை உருவாக்கினால், இந்த சீசனில் தோற்றது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

Story first published: Tuesday, June 7, 2022, 17:09 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+