Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தால் விலகிய அவர்...! அதிர்ச்சியில் தல தோனி... சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. கவலையில் ரசிகர்கள்

சென்னை: காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டிகளில் இருந்து சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ விலகியுள்ளார்.அதனால் சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

1
45773

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ விளையாடி வருகிறார். சென்னை அணியில் 'டெத் ஓவர்கள்' வீசுவதில் வல்லவர் அவர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவருக்கு ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டது.

பிராவோ காயம்

பிராவோ காயம்

அதனால் நாளைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அவருக்கு முதல் நிலை ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டுள்ளது.

பிராவோ விலகல்

பிராவோ விலகல்

அதனால் 2 வாரங்கள் அவர் சென்னை அணிக்காக விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

பிராவோ விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான நியூசிலாந்தின் ஸ்காட் குஜ்லியானுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும்.

போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை நடைபெறும் போட்டியில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்கிறது. 9ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸையும், 11ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் சந்திக்கிறது. 14ம் தேதி கொல்கத்தா நைட் ரைசர்ஸ் அணியையும், 17ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும் எதிர்கொள்கிறது.

Story first published: Friday, April 5, 2019, 21:17 [IST]
Other articles published on Apr 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+