Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் சொந்த டீம் கூட என்னை நம்பலை.. ஆனா தோனி என்னை நம்புறாரு.. உருகிய பிரபல சிஎஸ்கே வீரர்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஐபிஎல்-இல் எப்போதுமே ஸ்பெஷல் தான். பல வீரர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து அந்த அணியில் ஆடி வருகிறார்கள்.

Recommended Video

CSK மற்றும் Dhoni பற்றி உருக்கமாக பேசிய பிராவோ

அவர்களில் ஒருவர் தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் பிராவோ. கடந்த 2011இல் இருந்து சிஎஸ்கே அணியில் இடம்பெற்று வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கூட அவரை தேர்வு செய்வது இல்லை. ஆனால், சிஎஸ்கே அணி அவரை தொடர்ந்து தன் அணியில் தேர்வு செய்து வருகிறது.

சிஎஸ்கே மாதிரி பார்க்க முடியாது

சிஎஸ்கே மாதிரி பார்க்க முடியாது

அது பற்றி பேசிய பிராவோ சிஎஸ்கே அணி போன்ற ஒரு அணியை தன்னால் பார்க்க முடியாது என்றும், தோனி, பிளெம்மிங்குக்கு தான் நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார். ஷேன் வாட்சன் கூறிய வார்த்தைகளை சுட்டிக் காட்டி பேசினார் பிராவோ.

அழுத்தம் இருக்காது

அழுத்தம் இருக்காது

"வேறு அணியில் நீங்கள் சரியாக ஆடாவிட்டால் அழுத்தத்தை உணர்வீர்கள். ஆனால், சிஎஸ்கே அணியில் நீங்கள் அதை உணர மாட்டீர்கள்." என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி கூறினார் பிராவோ. 2018இல் தடைக்கு பின் வந்த சிஎஸ்கே அதே பழைய வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஷேன் வாட்சன் சொன்ன விஷயம்

ஷேன் வாட்சன் சொன்ன விஷயம்

"ஷேன் வாட்சன் மிக வெளிப்படையாக கூறினார். வேறு அணியாக இருந்தால் அவரை நீக்கி இருப்பார்கள் அல்லது அவர் ஓய்வு முடிவை பற்றி சிந்தித்து இருப்பார் என. சிஎஸ்கே போன்ற ஒரு அணியை பார்க்கவே முடியாது என நினைக்கிறேன்" என்றார் பிராவோ.

தோனி வைத்த நம்பிக்கை

தோனி வைத்த நம்பிக்கை

மேலும், தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிற்கு தான் நன்றி கூற வேண்டும் என்றார் பிராவோ. அடுத்து தன் அணியே தன்னை நம்பாத போது தோனி தன் மீது கொண்ட நம்பிக்கை பற்றி பேசினார்.

இத்தனை நம்பிக்கை ஏன்?

இத்தனை நம்பிக்கை ஏன்?

"நான் பல முறை என்னை நானே கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஏன் தோனி போன்ற ஒருவர் என் மீது இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார். என் (வெஸ்ட் இண்டீஸ்) அணி மற்றும் தேர்வுக் குழு கூட என்னை நம்பவில்லை. ஆனால், தோனி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார். அது எனக்கு மிகப் பெரிய விஷயம்" என்றார் பிராவோ.

Story first published: Wednesday, April 29, 2020, 20:21 [IST]
Other articles published on Apr 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+