Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பூமி முள்ளங்கி மாதிரி இருக்கும்.. என்கிட்ட ஆதாரம் இருக்கு.. ஷாக் கொடுத்த கிரிக்கெட் வீரர்!

லண்டன் : பூமி உருண்டையான வடிவம் (Spherical) கொண்டது என அறிவியல் நமக்கு சொல்கிறது. ஆனால், அது தவறு என ஒரு கூட்டம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

அவர்கள் தான் தட்டை பூமியாளர்கள் (Flat Earthers). அவர்கள் இணையத்தில் பல ஆண்டுகளாக தங்கள் நம்பிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த பூமி தட்டையான வடிவம் கொண்டது அல்லது உருண்டை வடிவம் அல்லாத நீள் வட்ட வடிவத்தில் சமமான தரைப்பகுதியில் மட்டுமே நிலம், கடல் எல்லாம் அமைந்துள்ளது என்பதே அவர்களின் நம்பிக்கை.

ஆண்ட்ரூ பிளின்டாப்

ஆண்ட்ரூ பிளின்டாப்

இந்த நம்பிக்கையை எல்லாம் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? என நீங்கள் நினைத்தால் அது தவறு. பல பிரபலங்கள் இதை உறுதியாக நம்புகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப். அவர் இது பற்றி சமீபத்தில் பேசி உள்ளார்.

சந்தேகம்

சந்தேகம்

டாக்ஸ்போர்ட் என்ற ஊடகத்திடம் பேசிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப் பூமியின் வடிவம் தொடர்பான தன் சந்தேகத்தை கேட்டுள்ளார். பூமி முழுமையான உருண்டை வடிவம் கொண்டதல்ல என்பது பற்றி அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

புவி ஈர்ப்பு விசை

புவி ஈர்ப்பு விசை

அது மட்டுமில்லாமல், பூமியின் புவி ஈர்ப்பு விசை மீதான தன் சந்தேகங்கள், மேலே இருந்து பார்க்கும் போது கடல் நீர் ஏன் கொந்தளிக்கவில்லை, அப்படியே நிற்கிறது என்பன போன்ற பல விஷயங்களை ஆண்ட்ரூ பிளின்டாப் பேசி உள்ளார்.

தட்டையான முள்ளங்கி

தட்டையான முள்ளங்கி

பிளின்டாப் கூறுகையில், "பூமி தட்டையான முள்ளங்கி போன்றது. இது பான் கேக் போன்ற வடிவம் கொண்டதல்ல. நான் எப்போதும் அப்படி கூறியதில்லை. இது லேசான உருண்டை வடிவம் கொண்டது. ஆனால், நீங்கள் கூறுவது போல முழுமையான உருண்டை வடிவம் கொண்டதல்ல" என்றார்.

அது முட்டாள்தனம்

அது முட்டாள்தனம்

மேலும், "மக்கள் நான் முட்டாள் என நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். நாம் இந்த பூமியில் ஒட்டிக் கொண்டு இருக்க புவி ஈர்ப்பு விசை என்று ஒன்று இருக்கிறது என்கிறார்கள். உணர்ச்சி வசப்படாமல், அமைதியாக அதுபற்றி யோசித்துப் பாருங்கள். அது முட்டாள்தனம் இல்லையா?" என கேட்டுள்ளார் பிளின்டாப்.

ஆஸ்திரேலியாவில் தலைகீழ்

ஆஸ்திரேலியாவில் தலைகீழ்

"நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் தலைகீழாக இருப்பீர்கள். இரத்தம் அனைத்தும் தலைக்கு ஏறி விடும். அனைத்து நினைத்து பார்க்கவே பயங்கரமாக உள்ளது." என புவி ஈர்ப்பு விசை குறித்த தன் சந்தேகத்தை எழுப்பினார் ஆண்ட்ரூ பிளின்டாப்.

ஆதாரம் உள்ளது

ஆதாரம் உள்ளது

மேலும், உலகம் உருண்டையாக இல்லை என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது எனவும் கூறினார் பிளின்டாப். "ஒரு ஹெலிகாப்டரில் நாம் சுற்றி வரும் போது, பூமி உருண்டை என்றால் ஏன் நம் அருகே வரமறுக்கிறது" என கேள்வி எழுப்பினார் பிளின்டாப்.

கடல் நீர் சந்தேகம்

கடல் நீர் சந்தேகம்

மேலும், "நாம் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது (கடல்) நீர் ஏன் கொந்தளிக்காமல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது. அதே போல, 16 மைல்களுக்கு அப்பால் லேசரை ஏவினால், பூமி உருண்டை என்றால் நம்மால் அதை பார்க்க முடியாமல் போக வேண்டும். ஆனால், நம்மால் அதை பார்க்க முடியும்" எனவும் வரிசையாக தன் சந்தேகங்களை அடுக்கினார் பிளின்டாப்.

பலரும் உள்ளனர்

பலரும் உள்ளனர்

பிளின்டாப் கேட்கும் கேள்விகள் சில நியாமானதாக உள்ளது. சில சாமானிய மனிதர்களுக்கு புரியாததாக உள்ளது. பிளின்டாப் மட்டுமில்லாமல், பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர் கைரி இர்விங் மற்றும் ரெஸ்லிங் வீரர் ஏஜே ஸ்டைல்ஸ் ஆகியோரும் பூமி தட்டையானது என நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 16, 2020, 13:57 [IST]
Other articles published on Apr 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+