ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி
கிறிஸ்ட்சர்ச்: பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகவும் குட்டி நாடான பப்புவா நியு குய்னாவில் நேற்று எரிமலை வெடித்தது. அதே நேரத்தில் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அணி அதிக சிரமப்படாமல், அந்த நாட்டு அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது இரண்டாவது ஆட்டத்தில் பப்புவா நியூ குய்னா அணியுடன் மோதியது.
முதலில் ஆடிய பப்புவா நியூ குய்னா அணி 21.5 ஓவர்களில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அங்குல் ராய் 14 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இந்தியா 8 ஓவர்களில், 65 ரன்களை எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் பிருத்வி ஷா, 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி வரும் 19ம் தேதி ஜிம்பாப்வே அணியுடனும் மோதுகிறது.
Story first published: Tuesday, January 16, 2018, 11:22 [IST]
Other articles published on Jan 16, 2018


Click it and Unblock the Notifications