டெக்கன் சார்ஜஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிட்டும் பௌனிகரும் ஆட வந்தார்கள்.
இருவரும் விக்கெட் இழக்காமல் ஆடினர். 5.4 ஓவரில் ஸ்கோர் 31 ரன்னாக இருக்கம்போது பௌனிகர் 20 ரன்னில் ஸ்டெய்ன் பந்தில் அவுட் அனார். அடுத்து போதா களம் இறங்கினார்.
டிராவிட் 28 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து 3வது விக்கெட் ஜோடியாக போதாவுடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அவுட்டாகாமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 18.5 ஓவரில் 141 ரன் எடுத்து வெற்றி பெற்றது. போதா 67 ரன் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications