Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி பெரிய சைஸ் பேட் பயன்படுத்தினால் ஆப்பு.. புள்ளிகளை குறைத்து அதிரடி காட்டிய இங்கிலாந்து

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் பல விதிகள் மாறி இருக்கிறது, பல விஷயங்கள் மாறி இருக்கிறது. முன்பெல்லாம் பேட் சைஸ் பார்த்தால் அவ்வளவு சிறியதாக இருக்கும். அதாவது பேட்டின் பக்கவாட்டு அகலம் சிறியதாக இருப்பதால் நீங்கள் எவ்வளவு வேகமாக பந்தை அடித்தாலும் சிக்ஸருக்கு செல்வது கடினம்.

ஆனால் காலம் மாற மாற பேட்டின் சைசும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது டி20 கிரிக்கெட் எல்லாம் வீரர்கள் பேட்டின் சைஸ் பெரியதாக வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறார்கள். இதனால் தான் வீரர்களால் சிக்சர் அடிக்க முடிகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

cricket ecb essex

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் கவுண்டியில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது எஸ்சக்ஸ் அணியும் நாட்டிங்காம் அணியும் டிரண்ட் பிரிட்ஜில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார்கள். இது எஸ்எக்ஸ் அணி 254 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது பெரோஸ் என்ற வீரர் முதல் இன்னிங்ஸில் 18 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 32 ரன்களும் சேர்த்த நிலையில் அந்தப் போட்டியில் எஸ்சக்ஸ் வீரர் பிரோஸ் பயன்படுத்திய பேட் விதிகள் மீறி அகலமான பெரிய சைஸில் இருந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் எம்சிசி கிரிக்கெட் விதிகளின்படி பேட்டின் அகலம் 10.8 சென்டிமீட்டர் அளவு தான் இருக்க வேண்டும்.

ஆனால் பிரோஸ் பயன்படுத்திய பேட் சைஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து எக்சக்ஸ் அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த 20 புள்ளிகளில் 12 புள்ளிகள் அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எஸ்சக்ஸ் அணி இம்முறை கவுண்டிங் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு பறிபோகி இருக்கிறது.

இன்னும் இரண்டு போட்டிகளில் எஞ்சி இருக்கும் நிலையில் முதலிடத்தில் உள்ள சர்ரே அணியை விட 56 புள்ளிகள் பின் தங்கி இருக்கிறது. தற்போது இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இதில் இரண்டிலும் வெற்றி பெற்றால் கூட அவர்களால் 40 புள்ளிகள் தான் பெற முடியும். இந்த நிலையில் எஸ்சக்ஸ் கிரிக்கெட் அணியின் தலைவரும் முன்னாள் கேப்டனுமான கெயிட் பிளச்சர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஃபெரோஸ் எந்த தவறையும் செய்யவில்லை. ஆனால் ஒட்டுமொத்த அணியும் எதற்கு பழிவாங்கப்பட்டிருக்கிறது. பிரோஸ் தவறு செய்திருந்தால் அவர் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மனாக பேட்டின் அளவு சில மில்லி மீட்டர் அதிகமாக இருந்தால் கூட அது போட்டியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. முன்னாள் வீரர் என்ற முறையில் எனக்கு தெரியும் நடுவர்கள் எப்போதுதான் வீரர்களின் பேட்டை செக் செய்கிறார்கள்.

இந்த விஷயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முட்டாள் தனமாக செயல்பட்டு இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் எஸ்சக்ஸ் அணி இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக தெரிவித்துள்ளது. மேலும் எஸ்சக்ஸ் அணிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை சரியானது அல்ல என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Story first published: Thursday, September 12, 2024, 22:31 [IST]
Other articles published on Sep 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+