2023 ஆஷஸ் டெஸ்ட் தொடர் அட்டவணை அறிவிப்பு.. இங்கிலாந்து விளையாட உள்ள போட்டிகள் விவரம்
லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2023 ஆம் ஆண்டு கோடை காலத்தில் விளையாட உள்ள கிரிக்கெட் போட்டிகள் அட்டவணையை தற்போது வெளியிட்டு உள்ளது.
Recommended Video
இதில் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடர்பான அட்டவணையும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு அயர்லாந்த அணி ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி விளையாடுகிறது.

ஆஷஸ் தோல்வி
இதனை தொடர்ந்து ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நான்கிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வி அடைந்து ஆசஸ் தொடரை இழந்தது. இதனை அடுத்து மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றும் உத்வேகத்துடன் இங்கிலாந்து உள்ளது.

2023 ஆஷஸ் அட்டவணை
வரும் ஜூன் 16ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியும், ஜூன் 28ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூலை 6ஆம் தேதியும், மான்செஸ்டரில் ஜூலை 19ஆம் தேதி நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியும், ஜூலை 27ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.'

நியூசிலாந்து தொடர்
இதனை தொடர்ந்து நியூசிலாந்த அணி நான்கு டி20 மற்றும் நான்கு ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வந்தடைகிறது. டி20 தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டி செப்டம்பர் எட்டாம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியா வருகை
இதனைத் தொடர்ந்து அயர்லாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வருகிறது. இந்த தொடர் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி உலக கோப்பை தொடருக்காக தயாராக இருக்கிறது.


Click it and Unblock the Notifications