For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் பலமே போச்சா?.. 5வது டெஸ்ட் பிட்ச் ரிப்போர்ட்.. பிர்மிங்கம்மில் காத்திருக்கும் சவால்!!

பிர்மிங்கம்: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Recommended Video

IND vs ENG 5th Test: India-வுக்கு இருக்கும் Opening Pairs! | Aanee's Appeal | *Cricket

இரு அணிகளும் மோதும் 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பயிற்சி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து தொடரில் இங்கிலாந்து அணியும் கலக்கியுள்ளதால், போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

5வது டெஸ்ட் போட்டி

5வது டெஸ்ட் போட்டி

கடந்தாண்டு இரு அணிகளும் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்றது. ஒரே ஒரு போட்டி மட்டும் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. இந்த போட்டி கவுரவப்பிரச்சினை மட்டுமல்லாது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

பிட்ச்-ன் ரிப்போர்ட்

பிட்ச்-ன் ரிப்போர்ட்

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. எட்ஜ்பாஸ்டன் களமானது, பொதுவாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்கும் சம அளவில் சாதகமாக இருக்கும். எனினும் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வதே சாதுர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கடந்தகால ரெக்கார்ட்கள்.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஆட்டத்தின் முதல் நாளில் இங்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஸ்விங் ஆகும். இதே போல பிட்ச்-ன் தன்மை புரியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். இந்த மைதானத்தில் சராசரியாக முதலில் பேட்டிங் செய்யும் அணி 300+ ரன்களை அடிக்கும். 300 ரன்களை கடந்தால் தான் வெற்றி வாய்ப்பாவது இருக்கும்.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்தியாவின் பலம் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் தான். ஆனால் இந்த களத்தில் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டியுள்ளது. இங்கிலாந்து அணி 5 பவுலர்களையும் வேகப்பந்துவீச்சாளர்களாக களமிறக்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மைதான ரெக்கார்ட்ஸ்

மைதான ரெக்கார்ட்ஸ்

இந்த மைதானத்தில் இதுவரை 53 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 28 போட்டிகளிலும், எதிரணிகள் 10 முறையும் தான் வென்றுள்ளது. 15 போட்டி டிரா ஆகியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணி 18 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்த அணி 20 முறையும் வெற்றி கண்டுள்ளது.

Story first published: Wednesday, June 29, 2022, 16:40 [IST]
Other articles published on Jun 29, 2022
English summary
India vs england 5th Test pitch report ( இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் ) இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+