Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருத்தருக்குத்தான் வாய்ப்பு.. மண்ணின் மைந்தருக்கே டாட்டா காட்டும் கோலி.. சென்னை டெஸ்டில் திருப்பம்

சென்னை: சென்னையில் நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர்தான் விளையாடுவார் என்று கருதப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடக்க உள்ளது. சென்னையில் தற்போது வீரர்கள் இதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை

சென்னை

சென்னையில் நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் ஸ்பின் பவுலர்கள் யார் என்பது கேள்வியாக உள்ளது. இந்திய அணியில் இரண்டு ஸ்பின் பவுலர்கள் ஆட வேண்டும்.

இந்திய அணி

இந்திய அணி

தற்போது இந்திய அணியில் நான்கு ஸ்பின் பவுலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி குல்தீப் யாதவ், அஸ்வின் , வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படும்.

அஸ்வின்

அஸ்வின்

இந்த நிலையில் இந்திய அணியில் ஒரே நேரத்தில் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இருவரும் ஆட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஒரு லெக் ஸ்பின் பவுலர் தேவை என்பதால் கோலி பெரும்பாலும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுப்பார் என்கிறார்கள். இதனால் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இருவரில் ஒருவர் வாய்ப்பை இழக்க நேரிடும் .

இரண்டில் ஒருவர்

இரண்டில் ஒருவர்

அதன்படி அஸ்வின் முதல் போட்டியிலும் வாஷிங்க்டன் சுந்தர் இரண்டாவது போட்டியிலும் ஆட வாய்ப்புள்ளது. அல்லது இரண்டு போட்டியிலும் அஸ்வின் மட்டுமே ஆடுவார் என்று கூறப்படுகிறது. குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்கிறார்கள்.

Story first published: Sunday, January 31, 2021, 14:59 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+