ஒரே உற்சாகம், கும்மாளம், கோப்பை நமக்கே… கூறுகிறார் ‘குரு’ சாஸ்திரி
மெல்பர்ன்: நடப்பு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை ருசித்துள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும் கணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'பி'பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தன்னை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, யுஏஇ, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளை சூறையாடிதோடு 'தல' நாங்கதான் என்று நிரூபித்துள்ளது.
இந்த வெற்றியை இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அணியின் இயக்குநரான ரவி சாஸ்திரி இந்திய அணியின் ஆட்டத்தைப் பற்றி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

நாக் அவுட்
"இப்போதுள்ள இந்திய அணியின் ஆட்டத்திறன் படி நல்ல நிலையில் உள்ளோம். ஒவ்வொரு போட்டியையும் நாக்-அவுட் போட்டியாகவே அணுகினோம்.

நீங்கிய களைப்பு
போட்டியில் வெற்றிபெறத் தொடங்கிவிட்டால், மகிழ்ச்சி வர, களைப்பு நீங்கி விடும். தோற்கும்போது தான் ஓய்வறையில் அடைபட்டுக் கிடப்போம்.

ஒரே உற்சாகம்தான்
இப்போதைக்கு இந்திய அணியினர் ஒரு மகிழ்ச்சிகரமான குழுவாக இருந்து வருகின்றனர். கால்பந்து விளையாடுகின்றனர், உற்சாகமாகத் திகழ்கின்றனர்.

கோப்பை எங்களுக்கே
எண்ணிக்கைகளை பூர்த்தி செய்ய நாம் இங்கு வரவில்லை. எந்த ஒரு எதிரணியினருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்கப்போவதில்லை. உலகக்கோப்பையை வெல்லப் போகிறோம்." என்றார்.

சுனில் கவாஸ்கர்
பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பாராட்டுகளுக்கும் அவர்கள் உரித்தானவர்களே என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது சிறந்த சாதனையாகும்.

பந்துவீச்சாளர்களின் திறமை
நிறைய தருணங்களில் பவுலர்களின் திறமை மீது பேட்ஸ்மென்களின் திறமை என்ற நிழல் படிந்து விடுகிறது. இப்போது பேட்ஸ்மென்களுக்கு புகழ் சென்றடையாது. பவுலர்களுக்கு புகழாரம் குவிந்து வருவது மகிழ்ச்சியான விஷயம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications