For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னை மரத்துக்கு ஒரு குத்து,ஏணி சின்னத்துக்கு ஒரு குத்து! தேர்தல் முடிவுக்கு வாழ்த்து சொன்ன சேவாக்

டெல்லி : நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த தேர்தல் அதற்கான அரை இறுதியாக காணப்படுகிறது.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 230 தொகுதியில் உடைய இந்த மாநிலத்தில் பாஜக 167 இடங்களில் முன்னிலை வகித்து ஆட்சியை பிடித்துள்ளது.

Election result 2023 in tamil - Virender sehwag wishes BJP and congress for election win

காங்கிரஸ் 62 இடங்களில் தான் வென்றுள்ளது. இதேபோன்று ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 199 இடங்களில் பாஜக 115 இடங்களிலை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 69 இடங்களில் வென்று இருக்கிறது. இதேபோன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில் பாஜக 56 இடங்களை வென்று அந்த மாநிலத்தை கைப்பற்றி இருக்கிறது. இதுபோன்று தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 தொகுதிகளை பெற்று அந்த மாநிலத்தில் வெற்றியை பெற்று இருக்கிறது.

இந்த நான்கு மாநில தேர்தலில் பாஜக மூன்றிலும் காங்கிரஸ் ஒன்றிலும் வென்று இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் மக்கள் தங்களுடைய முடிவை சொல்லிவிட்டார்கள். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்ற பாஜகவிற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

அதேசமயம் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று ஷேவாக் கூறி இருக்கிறார். சேவாக்கின் இந்த வாழ்த்திற்கு ரசிகர்கள் கிண்டல் அடித்திருக்கிறார்கள். இரண்டு கட்சிக்குமே வாழ்த்து கூறியதன் மூலம் தான் பொதுவானவர் என்பதை சேவாக் காட்டிக் கொள்ள முயற்சி செய்வதாக ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

மேலும் சிலர் தென்னை மர சின்னத்திற்கு ஒரு குத்து ஏணி மர சின்னத்திற்கு ஒரு குத்து என்பதை சேவாக் இந்த ட்விட் மூலம் உண்மையாக்கி விட்டதாக கூறியுள்ளனர். அதே சமயம் வெங்கடேஷ் பிரசாத் போன்ற கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் பாஜகவுக்கு வெளிப்படையாக வாழ்த்துக்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 3, 2023, 18:11 [IST]
Other articles published on Dec 3, 2023
English summary
Election result 2023 in tamil - Virender sehwag wishes BJP and congress for election win தென்னை மரத்துக்கு ஒரு குத்து,ஏணி சின்னத்துக்கு ஒரு குத்து! தேர்தல் முடிவுக்கு வாழ்த்து சொன்ன சேவாக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+