"டை"யெல்லாம் கட்டி தயாராக இருக்கும் ரவி சாஸ்திரி, கும்ப்ளே, பாட்டீல்... எதுக்குன்னு தெரியுமா?
மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளோரிடம் விரைவில் நேர்காணல் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே கூறியுள்ளார்.
இதுவரை வந்துள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அது வடிகட்டப்பட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவோர் நேர்காணலுக்கு வரவழைக்கப்படுவர் என்றும் அவர்களிடம் நேர்காணல் நடத்தி இறுதியாக தலைமைப் பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் ஷிர்கே கூறியுள்ளார்.
இதுவரை 57 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஷிர்கே கூறியுள்ளார். அதிலிருந்து தகுதி உடையோர் வடிகட்டப்பட்டு அவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என்று ஷிர்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தகுதி உடையவர்களிடம் நேர்காணல்
முதலில் இந்த 57 பேரைப் பரிசீலித்து அதில் தகுதி இல்லாதவர்கள் நீக்கப்படுவர். பின்னர் தகுதி உடையவர்களைக் கொண்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்படும். அதுவும் பரிசீலிக்கப்பட்டு இறுதிப் பட்டியலைத் தயார் செய்வோம்.

இரு விதமான பரீட்சைகள்
இவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும். அதேபோல அவர்களிடம் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தால் என்ன செய்வீர்கள் என்பது குறித்த யோசனைகள், திட்டங்கள் வரவேற்கப்படும்.

சிறந்தவர் தேர்வு செய்யப்படுவார்
இவ்வாறு பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு தகுதியானவர், திறமையானவர், சிறந்தவர் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்றார் ஷிர்கே.

முக்கியஸ்தர்கள்
57 பேர் மனு போட்டிருந்தாலும் கூட அதில் முக்கியமானவர்களாக இருப்பது ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டீல், அனில் கும்ப்ளே ஆகியோர்தான். இதில் சந்தீப் பாட்டீல் தற்போது தேர்வாளர் குழுத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராக இருந்தவர். கும்ப்ளே முன்னாள் கேப்டன், அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையுடன் இருப்பவர்.


Click it and Unblock the Notifications