For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயோ பும்ரா வேண்டாம்ப்பா.. ரொம்ப ஸ்பீடு.. கோலி ஓகே.. தெறிக்க விட்ட எல்லிஸ் பெர்ரி

சிட்னி: இந்தப் பக்கம் பும்ரா பவுலிங் போட தயாராக இருக்கிறார்.. அந்தப் பக்கம் கோலிக்கு நீங்க பவுலிங் போடலாம்.. இதில் எது உங்களது சாய்ஸ் என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஸ்டார் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி.

Recommended Video

Ellyse Perry has revealed that she wants to bowl for Kohli

உலகெங்கும் விளையாட்டுக்கள் முடங்கிப் போய் கிடக்கின்றன. காரணம் கொரோனாவைரஸ் பரவல். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களும், வீராங்கனைகளும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். அடிக்கடி சாட் செய்கின்றனர். வீடியா லைவ் சாட் செய்கின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெர்ரியும் சோனி ஸ்போர்ட் இந்தியாவுக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு லைவ் சாட் செய்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீராங்கனை பெர்ரி. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அழுத்தமாக முத்திரை பதித்தவர்.

பெர்ரி ஒரு ஆல்-ரவுண்டர்

பெர்ரி ஒரு ஆல்-ரவுண்டர்

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்துபவர் பெர்ரி. ஆஸ்திரேலிய அணியின் அசைக்க முடியாத சொத்தாக வலம் வருபவர் பெர்ரி. அவரிடம் சோனி லைவ் ஷோவில் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் பெர்ரி சற்றும் சளைக்காமல் பதிலளித்து பதிலடி கொடுத்து கலக்கினார். அதில் ஒன்று ரொம்பவே சுவாரஸ்யமானது. அந்த கேள்வி பதில்களைப் பார்ப்போம்.

சேஸிங் போதும்ப்பா

சேஸிங் போதும்ப்பா

முதல் கேள்வி இது. கடைசி ஓவரில் 20 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் அல்லது 6 ரன்களை டிஃபன்ட் பண்ண வேண்டும். இதில் எதை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பெர்ரி கொடுத்த பதில் 20 ரன்களை சேஸ் செய்வேன் என்பது. அதாவது தனது பேட்டிங் பலத்தின் மீது வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கையை அவரது இந்த பதில் வெளிப்படுத்தியது.

கோலியே ஓகே

கோலியே ஓகே

ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்து வீச்சை சமாளிப்பீங்களா அல்லது விராட் கோலிக்கு பவுலிங் செய்யப் பிடிக்குமா என்பது 2வது கேள்வி. இதற்கு புன்னகையுடன் கொஞ்சம் அமைதி காத்த பெர்ரி, விராட்டுக்கு பவுலிங் செய்வேன் என்று பதிலளித்தார். பும்ரா வேகப் பந்து வீச்சாளர். அவரை சந்தித்து அடி வாங்குவதற்கு பேசாமல் கோலிக்கு பவுலிங் போட்டு விட்டு ஓடிடலாம்னு நினைச்சாரோ என்னவோ!

இந்தியாவே போதும்

இந்தியாவே போதும்

2021 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யாரை சந்திக்க விருப்பம்.. இந்தியாவையா அல்லது இங்கிலாந்தையா.. இது அடுத்த கேள்வி. அதற்கு அவர் அளித்த பதில் இந்தியாவையே மீண்டும் இறுதிப் போட்டியில் சந்திக்க விருப்பம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும்தான் மோதின என்பது நினைவிருக்கலாம்.

கோச் பதவி வேண்டும்

கோச் பதவி வேண்டும்

ஓய்வுக்குப் பிறகு கோச்சா இல்லை கமெண்டரியா என்ற கேள்விக்கு டக்கென அவர் சொன்ன பதில் கோச். பரவாயில்லையே.. வெட்டியா கதை அடிச்சுப் பேசும் வேலையை விட தன்னைப் போல நாலு நல்ல வீராங்கனைகளை உருவாக்குவது பெஸ்ட் என்று நினைக்கிறார் போல. அதுவும் சரிதான்.. நல்ல டெக்னிக்கான வீராங்கனை பெர்ரி. அவர் கோச்சானால் நிச்சயம் அணிக்கு பலன் கிடைக்கும்தான்.

உலகக் கோப்பையை விட

உலகக் கோப்பையை விட

அடுத்து வெல்ல விரும்புவது ஆஷஸ் தொடரா அல்லது அடுத்த உலகக் கோப்பையா என்பது அடுத்த கேள்வி. இதற்கு சற்று குழம்பிப் போய் விட்டார் பெர்ரி. ஓ.. தெரியலையே.. ம்ம்ம்.. அடுத்து ஆஷஸ்தான் என்று சொல்லியுள்ளார். என்னதான் இருந்தாலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டர்களுக்கு ஆசஸ்தான் பெரிதாக இருக்கும் எப்பவுமே. அந்த பாரம்பரியத்தை பெர்ரியும் மறக்கவில்லை.

லார்ட்ஸில் சதம்

லார்ட்ஸில் சதம்

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஹாட்ரிக் அல்லது லார்ட்ஸ் மைதானத்தில் சதம்.. இதில் எது உங்களது சாய்ஸ் என்ற அடுத்த கேள்விக்கு பெர்ரி அளித்த பதில், லார்ட்ஸ் மைதானத்தில் சதம் என்பதுதான். 99 சதவீத கிரிக்கெட்டர்களும் கூட இதையேதான் பதிலாக சொல்வார்கள். கிரிக்கெட்டின் மெக்காவாச்சே லார்ட்ஸ். அங்கு சதம் போடுவதுதான் அனைவருக்குமே லட்சியம்.

கலப்பு இரட்டையர் போட்டி

கலப்பு இரட்டையர் போட்டி

இது கொஞ்சம் விவரமான கேள்விதான்.. அதற்கு படு விவரமாக பதிலளித்துள்ளார் பெர்ரி. கிரிக்கெட்டராக இல்லாமல் போயிருந்தால்.. மகளிர் கால்பந்து உலகக் கோப்பை அணியில் விளையாடிருப்பீர்களா அல்லது கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரருடன் விளையாட விருப்பமா என்பது கேள்வி.. அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் கலப்பு இரட்டையர் என்று சிரித்தபடி பதிலளித்தார் பெர்ரி.

அருமையான வீராங்கனை

அருமையான வீராங்கனை

பெர்ரி ஒரு சூப்பர் பிளேயர் ஆவார். 8 டெஸ்ட் போட்டிகள், 112 ஒரு நாள் போட்டிகள் 120 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 624 ரன்களையும், ஒரு நாள் போட்டிகளில் 3022, டி20 போட்டிகளில் 1218 ரன்களையும் எடுத்துள்ளார். மூன்று போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 297 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் எல்லிஸ் பெர்ரி.

Story first published: Monday, May 4, 2020, 20:04 [IST]
Other articles published on May 4, 2020
English summary
Australian young star Ellyse Perry has revealed that she wants to bowl for Kohli instead of facing Bumrah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X