Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்.. இலங்கையை வீழ்த்தி எமர்ஜிங் ஆசிய கோப்பையை வென்றது

அல் அமீரத்: 2024 எமர்ஜிங் அணிகள் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை ஆப்கானிஸ்தான் ஏ அணி வீழ்த்தி வரலாறு படைத்து இருக்கிறது. இரண்டு முறை எமர்ஜிங் ஆசியக் கோப்பை வென்று இருந்த இலங்கை ஏ அணி இந்த முறையும் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ஆப்கானிஸ்தான் ஏ அணி சிறப்பாக ஆடி கோப்பையை வென்றது. இதன் மூலம், முதன்முறையாக எமர்ஜிங் ஆசிய கோப்பையை வென்றது ஆப்கானிஸ்தான் ஏ அணி. முன்னதாக இலங்கை ஏ, பாகிஸ்தான் ஏ அணியை அரை இறுதியில் வீழ்த்தி இருந்தது. அதே போல, இந்தியா ஏ அணியை ஆப்கானிஸ்தான் ஏ அணி அரை இறுதியில் வீழ்த்தி இருந்தது.

afghanistan sri lanka


பின்னர் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சேர்ந்து மொத்தமாக 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்து இருந்தனர்.

அதன் பின் பவன் ரதநாயகே 20 ரன்களும், சஹான் அராச்சிகே 64 ரன்களும், நிமேஷ் விமுக்தி 23 ரன்களும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் காசன்ஃபார் 2 விக்கெட்களும், பிலால் சமி 3 விக்கெட்களும் வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் அணிக்கு 134 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் ஏ அணியின் துவக்க வீரர் ஜுபாயித் அக்பரி முதல் ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். அதன் பின் கேப்டன் டர்விஷ் ரசூலி மற்றும் செடிகுல்லா அடல் இணைந்து ரன் சேர்த்தனர். டர்விஷ் ரசூலி 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அபாரமாக ஆடிய செடிகுல்லா கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 55 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கரீம் ஜன்னத் 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தும், முகமது இஷாக் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். ஆப்கானிஸ்தான் ஏ அணி 18.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Monday, October 28, 2024, 8:15 [IST]
Other articles published on Oct 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+