Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிட்ட விராட் கோலி பங்காளி.. ஸ்டான்னாகி நின்ற பட்லர்.. சீனுக்குள் வந்த ஆஃப்கானிஸ்தான்!

டெல்லி: இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லரை தரமான இன்-ஸ்விங்கர் பந்து மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் வீழ்த்தியுள்ளார்.

ENG vs AFG: Naveen ul Haq cleaned up Jos Buttler and the Indian crowd roars in support of Afghanistan at Delhi in World Cup 2023

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் 57 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவை ஆஃப்கான் அணியின் ஃபரூக்கி 2 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து வந்த இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோ ரூட் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மலான் 32 ரன்களில் வெளியேறினார்.

இதனால் 4வது விக்கெட்டுக்கு ஹாரி ஃபுரூக் - பட்லர் கூட்டணி இணைந்தது. தொடக்கம் முதலே விக்கெட்டை காப்பாற்ற பட்லர் நிதானமாக விளையாடினார். அதேபோல் பட்லர் வந்தபின் உடனடியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஒரு பக்கம் அபாரமான லைன் மற்றும் லெந்தில் வீசி நவீன் உல் ஹக் பட்லரை கூடுதலாக அச்சுறுத்தினார். இதனால் பொறுமை இழந்த பட்லர், ரன்கள் சேர்க்க தீவிரமாக இருந்தார்.

ENG vs AFG: Naveen ul Haq cleaned up Jos Buttler and the Indian crowd roars in support of Afghanistan at Delhi in World Cup 2023

இதனை புரிந்து கொண்டு நவீன் உல் ஹக் பந்தை சீம் பகுதியை பிடித்து க்ரீஸில் இருந்து கொஞ்சம் வெளியில் பிட்ச் செய்ய, அதனை பவுண்டரி அடிக்க முயன்று பட்லர் பேட்டை தூக்கினார். அந்த இடைவெளியில் பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. கிட்டத்தட்ட பும்ராவின் ஆக்‌ஷனில் பந்துவீசும் நவீன் உல் ஹக், அவரை போலவே ஒரு விக்கெட்டை வீழ்த்தியது ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய நவீன் உல் ஹக்கிற்கு, விராட் கோலி ரசிகர்களும் பாராட்டை கூறி வருகின்றனர்.

Story first published: Sunday, October 15, 2023, 20:33 [IST]
Other articles published on Oct 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+