Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக்சிங் டே அன்று நாக் அவுட் செய்ய ஆஸி. தயார்..!! வாழ்வா? சாவா? கட்டத்தில் இங்கிலாந்து..!!

மெல்போர்ன்: பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதில் இங்கிலாந்து தோற்றால் கதை முடிந்துவிடும். ஆஸ்திரேலியா தோற்றால், தொடர் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கும்

பாக்சிங் டே

பாக்சிங் டே

பாக்சிங் டே அன்று மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு துணையாக நிற்பார்கள். அவர்கள் எழுப்பும் கோஷம், கேலி, கிண்டலை பார்த்தாலே, எதிரணி வீரர்களுக்கு கால் நடுங்கும். ஆனால் விராட் கோலி போன்ற ஒரு சில வீரர்களே அவர்களுக்கு தனது பேட்டால் பதில் அளித்துள்ளனர்.

திரும்பும் கேப்டன்

திரும்பும் கேப்டன்

தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி நல்ல உத்வேகத்துடன் உள்ளது. ஆனால் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஹேசல் வுட், ரிச்சர்ட்சன், மைக்கேல் நேசர் ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கேப்டன் பாட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புவது ,ஆஸ்திரேலிய அணிக்கு பலமாக கருதப்படுகிறது

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடக்க வீரர் ரொரி பெர்ன்ஸ், நடுவரிசையில் ஆலிவ் போப், வேகப்பந்துவீச்சாளர் பிராட் ஆகியோர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி செய்த தவறை திருத்தி கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயிற்சியாளர் சில்வர்வுட் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Recommended Video

India to play South Africa in empty stadium in Boxing Day Test | OneIndia Tamil
பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இங்கிலாந்து அணி விவரம் 1,ஹமீது 2,சாக் கிராலி, 3,டேவிட் மாலன், 4,ஜோ ரூட், 5,பென் ஸ்டோக்ஸ், 6,பாரிஸ்டோ, 7 ஜாஸ் பட்லர், 8,மார்க் வுட், 9, ராபின்சன், 10,ஜாக் லீச் 11, ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலிய அணி விவரம் 1,டேவிட் வார்னர், 2, மார்கஸ் ஹாரிஸ். 3,மார்னஸ் லாபஸ்செங், 4,ஸ்டீஸ் ஸ்மித், 5,டிராவிஸ் ஹேட், 6,கேமரான் கிரீன், 7,அலெக்ஸ் கேரி, 8,பாட் கம்மின்ஸ், 9,மிட்செல் ஸ்டார்க், 10,நாதன் லயான். 11,ஸ்காட் போலாந்து

Story first published: Saturday, December 25, 2021, 18:54 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+