Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs AUS: கங்காரு டீமை ஓட விட்ட இங்கிலாந்து.. 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா

லார்ட்ஸ்: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மழையின் காரணமாக இந்த போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் பிலிப் சால்ட் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பென் டக்கெட் 63 ரன்கள் சேர்த்தார். வில் ஜாக்ஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ஹாரி ப்ரூக் அதிரடியாக ஆடி 58 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். அவர் 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். ஜேமி ஸ்மித் 28 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் ஒரு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார்.

eng vs aus australia england

லியாம் லிவிங்ஸ்டன் சிக்ஸர் மழை பொழிந்தார். அவர் 27 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை மிரள வைத்தார். 7 சிக்ஸ் மற்றும் 3 ஃபோர் அடித்து இருந்தார் லிவிங்ஸ்டன். அவரது ஸ்ட்ரைக் ரேட் 229 ஆக இருந்தது. இதை அடுத்து 39 ஓவர்களில் இங்கிலாந்து அணி 312 ரன்கள் சேர்த்தது. ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் என்ற ரன் விகிதத்தில் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி இருந்தது.

அடுத்து 313 ரன்கள் என்று கடின இலக்கை நோக்கி ஆடியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடி இருந்தனர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். பின்னர் டிராவிஸ் ஹெட் 34 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 28 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர்.

அதன் பின் ஆஸ்திரேலிய அணி வரிசையாக விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. குறிப்பாக எந்த ஒரு வீரராலும் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவில் கூட ரன் எடுக்க முடியவில்லை. டெஸ்ட் போட்டி போல ஆடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி ஒரு பக்கம் விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. இங்கிலாந்து அணியின் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணி 24.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே 21 ஓவர்களை வீசி இருந்தனர். சுழற் பந்துவீச்சாளர் அதில் ரஷீத் 3.4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. ரன்கள் வித்தியாசத்தில் இது ஆஸ்திரேலியாவின் நான்காவது மிகப் பெரிய தோல்வி ஆகும்.

மேலும், ஆஸ்திரேலிய அணி 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஒரு நாள் போட்டிகளில் அந்த அணியின் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வென்று இருந்தது. அடுத்த இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணி வென்று உள்ளது. இதை அடுத்து ஐந்தாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலை உள்ளது.

Story first published: Saturday, September 28, 2024, 9:47 [IST]
Other articles published on Sep 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+