Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4, 4, 6, 6, 6, 4.. சாம் கரணை பொளந்து கட்டிய டிராவிஸ் ஹெட்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

சவுதம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 19 பந்துகளில் மிரட்டலான அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார்.

3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டி20 போட்டி சவுதம்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் - மேத்யூ ஷார்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

eng vs aus travis head sam curran

இதில் டாப்லி வீசிய 2வது ஓவரிலேயே அடுத்தடுத்து 2 சிக்சர்களை ஷார்ட் அடிக்க, மறுபக்கம் நின்றிருந்த டிராவிஸ் ஹெட் ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து சாம் கரண் வீசிய 5வது ஓவரில் மட்டும் 4, 4, 6, 6, 6, 4 என்று மொத்தமாக 30 ரன்களை டிராவிஸ் ஹெட் விளாசினார். பின்னர் மஹ்மூத் வீசிய 6வது ஓவரின் 2வது பந்தில் சிக்சர் அடித்த டிராவிஸ் ஹெட், 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆனால் அந்த ஓவரிலேயே 23 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 6 ஓவர்கள் முடிவில் 86 ரன்களை குவித்திருந்தது. பின்னர் வந்த மிட்சல் மார்ஷ் 2 ரன்களில் வெளியேற, அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 26 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 10 ரன்களிலும், டிம் டேவிட் டக் அவுட்டாகியும் வெளியேற, ஆஸ்திரேலியா அணி தடுமாற தொடங்கியது. விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடி காட்டிய இங்லிஸ் மட்டும் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக 19.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 179 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணி தரப்பில் லிவிங்ஸ்டன் 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் மஹ்மூத் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் இங்கிலாந்து அணி தரப்பில் பில் சால்ட் - வில் ஜாக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தது.

eng vs aus travis head sam curran

முதல் ஓவரிலேயே 11 ரன்கள் சேர்த்தாலும், ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் அதிரடி வீரர் வில் ஜாக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சால்ட் - ஜோர்டான் காக்ஸ் கூட்டணி ரன் குவிப்பை விரைவுபடுத்தியது. ஹேசல்வுட் வீசிய 4வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் சேர்க்கப்பட, திடீரென ஜோர்டான் காக்ஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர் பிளே ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட்-ம் 20 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து ஜாம்பவா சுழலில் ஜேக்கப் 2 ரன்களில் போல்டாகி வெளியேற, லிவிங்ஸ்டன் - சாம் கரண் இணை சிறிது நேரம் போராடியது. இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சாம் கரண் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் லிவிங்ஸ்டன் 37 ரன்களிலும், ஆர்ச்சர் 4 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணியின் நம்பிக்கை மொத்தமாக முடிவுக்கு வந்தது. இறுதியாக 19.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

Story first published: Thursday, September 12, 2024, 8:19 [IST]
Other articles published on Sep 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+