Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs AUS - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. அலி நீக்கம்

லண்டன் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு அணிகளுக்குமே கேப்டனாக ஜாஸ் பட்லர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரான பாரிஸ்டோ, மோயின் அலி மற்றும் கிறிஸ் ஜார்டன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி சொதப்பியதன் காரணமாக இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

Eng vs Aus England squad

இதேபோன்று இளம் வீரர் ரெஹ்மான், டாம் ஹார்ட்லி ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதே போன்று மார்க் வுட் காயம் இன்னும் குணமடையாததால் அவரும் அணியில் இடம் பெறவில்லை. ஜாஸ் பட்லருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் தற்போது முழு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அடுத்த வாரம் உள்ளூர் டி20 போட்டிகளில் அவர் பங்கேற்க இருக்கிறார். இதனால் அவர் அணியில் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 20 வயது வீரரான 6.7 அடி உயரம் உள்ள இங்கிலாந்து பவுலர் ஜோஸ் ஹல் டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சாகிப் மஹ்மூத், ஜோர்டான் காக்ஸ் போன்ற வீரர்களுக்கும் டி20 அணியில் இடம் கிடைத்திருக்கிறது. கேளிக்கை விடுதிக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் பிரைடன் கர்ஸ் இரண்டு மாதம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்த தடை தற்போது முடிவடைந்த நிலையில் அவர் இரண்டு அணியிலுமே சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இரு அணிகளும் மோதும் இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்று டி20 ஒருநாள் தொடர் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறதால் ஹாரி புருக், பென் டக்கட், ஜெமி ஸ்மித், மேத்யூ பார்ட்ஸ் போன்ற வீரர்கள் ஒரு நாள் தொடரில் மட்டும் இருக்கிறார்கள்.

இதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் ஜோ ரூட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜோப்ரா ஆர்சர் இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டோப்லி, டர்னர்

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், ஃபில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான். டர்னர்

Story first published: Monday, August 26, 2024, 21:31 [IST]
Other articles published on Aug 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+