Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs AUS : செம ட்விஸ்ட்.. ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்.. தோற்க வேண்டிய போட்டியில் வென்ற இங்கிலாந்து!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

Recommended Video

IPL 2020 Schedule-வெளியாவதில் தாமதம் ஏன்? | Oneindia Tamil

163 ரன்களை துரத்திய செய்த ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்தும் தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரின், கடைசி பந்து வரை பரபரப்பு நீடித்ததால் ரசிகர்களுக்கு இந்தப் போட்டி விருந்தாக அமைந்தது.

முதல் போட்டி

முதல் போட்டி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

பட்லர் அதிரடி

பட்லர் அதிரடி

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம் ஆடினார். பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த மலன், பட்லருடன் இணைந்து ரன் குவித்தார். பட்லர் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மலன் ஒருபுறம் அதிரடி ஆட்டம் ஆட, மறுபுறம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டை இழந்து வந்தனர். டாம் பான்டன் 8, கேப்டன் இயான் மார்கன் 5, மொயீன் அலி 2, டாம் கர்ரன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து ஸ்கோர்

இங்கிலாந்து ஸ்கோர்

மலன் 19வது ஓவரின் முதல் பந்தில் 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 5 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். பின் கிறிஸ் ஜோர்டான் 14, அதில் ரஷித் 1 ரன் எடுக்க இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஆஸ்டன் அகர் 2, பாட் கம்மின்ஸ் 1, கேன் ரிச்சர்ட்சன் 2, கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட் வீழ்த்தினர். மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன் தலா 3 ஓவர்கள் வீசி 14 மற்றும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்.

வார்னர் - பின்ச் அபார துவக்கம்

வார்னர் - பின்ச் அபார துவக்கம்

அடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் அபார துவக்கம் அளித்தனர். இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியை நிலைகுலைய வைத்தனர்.

திருப்புமுனை ஓவர்

திருப்புமுனை ஓவர்

11வது ஓவரின் கடைசி பந்தில் ஆரோன் பின்ச் 32 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து 15வது ஓவரில் அதில் ரஷித் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்களிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவரில் 36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி விக்கெட் வீழ்ச்சியால் ரன் குவிக்க முடியாமல் திணறியது.

ஸ்டோனிஸ் நம்பிக்கை

ஸ்டோனிஸ் நம்பிக்கை

மார்கஸ் ஸ்டோனிஸ் மட்டுமே அதன் பின் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். அலெக்ஸ் கேரி 1, ஆஸ்டன் அகர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

ஸ்டோனிஸ் கடைசி ஓவரை முதல் பந்தில் இருந்து முழுமையாக எதிர்கொண்டார். முதல் மூன்று பந்துகளில் ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார். கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் தேவை எனும் நிலையில் அடுத்த இரண்டு பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார்.

கடைசி பந்து

கடைசி பந்து

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை. போட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரை வீசிய டாம் கர்ரன் பந்தை லோ-ஃபுல் டாஸாக வீசினார். அந்த பந்தில் ஸ்டோனிஸ் 2 ரன்கள் மட்டுமே எடுக்க இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சொதப்பல்

ஆஸ்திரேலியா சொதப்பல்

இங்கிலாந்து அணி பந்துவீச்சில் சுமாராகவே செயல்பட்டாலும், ஒரீரு ஓவர்களில் அடுத்தடுத்து வீழ்த்திய விக்கெட்கள் ஆஸ்திரேலிய அணியை நிலை குலைய வைத்து இங்கிலாந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தது. ஆஸ்திரேலியா தனக்கு கிடைத்த பெரிய துவக்கத்தை வீணாக்கி, வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்தது.

Story first published: Saturday, September 5, 2020, 13:12 [IST]
Other articles published on Sep 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+