For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படிலாம் விட்ற முடியாது.. இங்கிலாந்தை வீழ்த்தி நம்பர் 1 இடத்தை பிடித்த ஆஸி.. பரபர டி20!

சவுதாம்ப்டன் : மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Recommended Video

ஐ.பி.எல் 2020ல் அதிக சம்பளம் வாங்கும் 10 வீரர்கள் !

முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.

இந்த வெற்றி மூலம் டி20 தரவரிசையில் முதல் இடத்தை இங்கிலாந்து அணியிடம் இருந்து தட்டிப் பறித்தது ஆஸ்திரேலியா.

 என்னா அடி.. ஈவு இரக்கமே இல்லாமல் 5வது ஓவரில் சேஸிங்கை முடித்த செயின்ட் லூசியா.. தரமான சம்பவம்! என்னா அடி.. ஈவு இரக்கமே இல்லாமல் 5வது ஓவரில் சேஸிங்கை முடித்த செயின்ட் லூசியா.. தரமான சம்பவம்!

கடைசி போட்டி

கடைசி போட்டி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

இருவர் இல்லை

இருவர் இல்லை

முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடிய ஜோஸ் பட்லர் இடம் பெறவில்லை. கேப்டன் இயான் மார்கன் காயம் காரணமாக விலகினார். இங்கிலாந்து அணியை மொயீன் அலி வழிநடத்தினார். இங்கிலாந்து அணிக்கு டாம் பான்டன் - பேர்ஸ்டோ துவக்கம் அளித்தனர்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

பான்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 44 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். மலன் 21, பில்லிங்க்ஸ் 4 ரன்கள் சேர்த்தனர். மொயீன் அலி 23, ஜோ டென்லி 29 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

டேவிட் வார்னர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் - ஆரோன் பின்ச் துவக்கம் அளித்தனர். வேட் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்ச் 26 பந்துகளில் 39 ரன்களும், அடுத்து வந்த ஸ்டோனிஸ் 16 பந்துகளில் 26 ரன்களும் குவித்தனர்.

மாறிய ஆட்டம்

மாறிய ஆட்டம்

இதை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 80-ஐ கடந்தது. ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடியது. எனினும், இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டு விக்கெட்களை வீழ்த்தி வந்ததால் ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் குறைந்தது.

மிட்செல் மார்ஷ் அபாரம்

மிட்செல் மார்ஷ் அபாரம்

16வது ஓவரில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக 14 ரன்கள் சேர்க்க ஆட்டம் மீண்டும் ஆஸ்திரேலியா வசம் வந்தது. அதன் பின் ஆஸ்திரேலியா நிதானமாக ரன் சேர்த்து 19.3 ஓவர்களில் வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 39 ரன்கள் எடுத்தும், ஆஸ்டன் அகர் 16 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா ஆறுதல்

ஆஸ்திரேலியா ஆறுதல்

பட்லர், மார்கன் இல்லாத நிலையில் இங்கிலாந்து அணி அதிரடி பேட்டிங் ஆட முடியாமல் சொதப்பியது. ஏற்கனவே, டி20 தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது.

முதல் இடம்

முதல் இடம்

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவிடம் இருந்து டி20 தரவரிசையில் முதல் இடத்தை பறித்து இருந்தது இங்கிலாந்து. குறைந்த புள்ளிகளே வித்தியாசம் என்பதால் ஆஸ்திரேலியா மூன்றாவது போட்டியில் வென்று, இங்கிலாந்து அணியை முந்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

Story first published: Wednesday, September 9, 2020, 15:00 [IST]
Other articles published on Sep 9, 2020
English summary
ENG vs AUS : England vs Australia 3rd T20 match result - Australia beat England by 5 wickets and claimed number 1 rank again in ICC T20 ranking.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X