For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6, 0, 6, 6, 6, 4.. ஸ்டார்க்கை பொளந்து கட்டிய இங்கிலாந்து வீரர்.. ஆஸ்திரேலியா வரலாற்றில் முதல்முறை!

லண்டன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஓவரில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 28 ரன்களை விளாசி இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டன் புதிய வரலாறு படைத்துள்ளார். ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் 28 ரன்களை விட்டுக் கொடுத்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை மிட்சல் ஸ்டார்க் படைத்திருக்கிறார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி கனமழையால் பாதிக்கப்பட்டதால், தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்களை குவித்தது.

eng vs aus australia mitchell starc

சிறப்பாக ஆடிய கேப்டன் ஹாரி ப்ரூக் 58 பந்துகளில் ஒரு சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 87 ரன்களை விளாசினார். அதேபோல் கடைசி நேரத்தில் களமிறங்கிய லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 62 ரன்களை விளாசினார். இதனைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 24.4 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

சிறப்பாக பவுலிங் செய்த மேத்யூ பாட்ஸ் 8 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 மெய்டன் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் இளம் வீரர் பிரைடன் கார்ஸ் 6 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கு கோப்பை உறுதியாகும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சீனியர் வீரரான மிட்சல் ஸ்டார்க் மோசமான சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து பேட்டிங்கின் போது கடைசி ஓவரை வீச மிட்சல் ஸ்டார்க் அழைக்கப்பட்டார்.

அப்போது இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே லிவிங்ஸ்டன் அபாரமாக சிக்ஸ் ஒன்றை விளாச, 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. பின்னர் அடுத்த 3 பந்துகளில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசி லிவிங்ஸ்டன் ஆச்சரியம் கொடுத்தார். கடைசி பந்திலும் பவுண்டரி அடிக்கப்பட, இந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் விளாசப்பட்டது.

ஒரே ஓவரில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியை மிட்சல் ஸ்டார்க் விட்டுக் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து முதல் வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தமாகியுள்ளார் மிட்சல் ஸ்டார்க். இதனால் சோசியல் மீடியாவில் அவரை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, September 28, 2024, 11:56 [IST]
Other articles published on Sep 28, 2024
English summary
ENG vs AUS: Mitchell Starc is the first Australian bowler to give 28 runs in an over in the ODI History
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+