Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எங்க மீது பாய்ந்து வருவார்கள்னு நினைச்சேன்" இங்கிலாந்தை கிண்டல் செய்த மிட்செல் ஸ்டார்க்.

அகமதாபாத்: இங்கிலாந்து அணி எங்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்ததாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறியது .

ENG vs AUS: we thought England will come aggressively at us says Mitchell Starc

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மிச்சல் ஸ்டார்க் ,இந்த வெற்றியை குறித்து அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம். தொடர்ந்து வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடரில் நாங்கள் சிறந்த தொடக்கத்தை தரவில்லை. மெதுவாக தான் நன்றாக விளையாடி வருகிறோம். இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் களமிறங்கியது.

இந்த ஆட்டத்தில் அவர்கள் எங்களை நோக்கி ஆக்ரோஷமாக வருவார்கள் என எண்ணிணோம். ஆனால் எங்கள் அணியில் ஆடம் சாம்பா, இன்று சிறப்பாக செயல்பட்டு இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடம் சாம்பா, இந்த சிறந்த நாளால் இங்கிலாந்து அணி நெருக்கடிக்கு ஆளானது. நியூசிலாந்துக்கு எதிராகவும் கூட இதே போல் ஒரு பிரச்சினையை தான் இங்கிலாந்து அணி சந்தித்தார்கள் என நினைக்கிறேன்.

இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி வந்தோம். இந்த தொடரில் எந்த அணியுமே குறைத்து மதிப்பிட முடியாது. அனைவருமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்திய அணியின் பந்துவீச்சு மிக பிரமாண்ட அளவில் இருந்தது என்று மிக்சிஸ் ஸ்டாக் கூறினார். இதனையடுத்து இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது என்ற ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா ஸ்டம்பை நோக்கி தொடர்ந்து பந்து வீசியதற்கு கிடைத்த பரிசாக விக்கெட்டுகளை பார்ப்பதாக கூறினார்.

இந்த வெற்றி எங்களுக்கு முழு திருப்தியை கொடுப்பதாகவும் தொடர்ந்து பாசிட்டிவாக விளையாடி இனிவரும் போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் ஆடம் சாம்பா கூறினார். இன்னும் என்னுடைய சிறந்த ஆட்டத்தை நான் வெளிப்படுத்த வில்லை என்று நம்புவதாகவும் ஆடம் சாம்பா கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 4, 2023, 23:33 [IST]
Other articles published on Nov 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+