
இங்கிலாந்து அதிரடி
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ரன் குவித்தது. துவக்க வீரர் ஜேசன் ராய் சதம் அடித்து 153 ரன்கள் குவித்தார். பேரிஸ்டோ 51, ஜோஸ் பட்லர் 64 ரன்கள் குவிக்க, அந்த அணி 50 ஓவர்களில் 386 ரன்களை எட்டியது.

சேஸிங் செய்ய முடியாது
387 ரன்கள் என்ற இலக்கை தங்களால் சேஸிங் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தது வங்கதேசம். இங்கிலாந்து அணியை அதிகபட்சம் 300 முதல் 330 ரன்களுக்குள் சுருட்ட நினைத்த வங்கதேசம், பந்துவீச்சில் சொதப்ப, 386 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. எனவே, 300 ரன்கள் என்பதை தங்கள் இலக்காக முடிவு செய்து கொண்டனர்.

நெட் ரன் ரேட்
ஏன் இப்படி? வெற்றிக்காக போராடுவது தானே சரி.. என்று பலரும் கேட்கலாம். ஆனால், தங்கள் பேட்டிங் பலம் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் வங்கதேசம், உலகக்கோப்பை லீக் சுற்றின் புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கி விடாமல் இருக்க, இந்தப் போட்டியில் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டனர்.

காரணம் இதுதான்
வெற்றிக்காக அதிரடியாக ஆடினால், சில சமயம் விரைவாக விக்கெட்கள் வீழ்ந்து விடும். அது பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைய காரணமாக இருக்கும். எனவே தான் இப்படி தங்களுக்கு தாங்களே இலக்கு நிர்ணயித்துக் கொண்டனர்.

ஷகிப் சதம்
இந்த திட்டப்படி ஆடுகையில், மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து 121 ரன்கள் குவித்து அணிக்கு உதவினார். வங்கதேசம் 48.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

எட்டவில்லை
ஆக, தனக்கு தானே வைத்துக் கொண்ட இலக்கையும் எட்டவில்லை அந்த அணி. 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஓரளவு நெட் ரன் ரேட்டையும் காப்பாற்றிக் கொண்டது வங்கதேசம்.


Click it and Unblock the Notifications