Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

150ஐ தாண்டிய ராய்.. விக்கெட் அள்ளிய ஆர்ச்சர், ஸ்டோக்ஸ்.. மொக்கையாக சேஸிங் செய்த வங்கதேசம்! #ENGvsBAN

கார்டிப்: இங்கிலாந்து - வங்கதேசம் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கிலலும், பந்துவீச்சிலும் மிரட்டியது.

இங்கிலாந்து அதிரடி பேட்டிங் வரிசை முன் வங்கதேச அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. சேஸிங்கின் போது வங்கதேச அணி தோல்வி என்று முடிவு செய்தே நிதானமாக ரன் சேர்த்து, தோல்வியை ஏற்றுக் கொண்டது.

இந்தப் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. எப்படியம் இந்த ஆடுகளத்தில் துவக்கத்தில் விக்கெட்கள் கிடைக்கும் என நம்பியது அந்த அணி.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

ஆனால், அந்த எண்ணத்திற்கு மாறாக இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேரிஸ்டோ அதிரடியாக ரன் குவித்தனர். அவர்களை வெளியேற்ற முடியாமல் திணறியது வங்கதேசம்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

ஜானி பேரிஸ்டோ 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 128 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பின்பு ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து, 4 சிக்ஸர்கள் பறக்க விட்டு ஆட்டமிழந்தார்.

ஜேசன் ராய் சதம்

ஜேசன் ராய் சதம்

துவக்க வீரர் ஜேசன் ராய் 121 பந்துகளில் 153 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை பெரிய ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த உலகக்கோப்பை தொடரில் ஜேசன் ராய் அடிக்கும் இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

வோக்ஸ், பிளங்கட் அசத்தல்

வோக்ஸ், பிளங்கட் அசத்தல்

அடுத்து கேப்டன் இயான் மார்கன் 35, பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி சில ஓவர்களில் பின்வரிசை வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட் அதிரடியாக ஆடினர். வோக்ஸ் 8 பந்துகளில் 18 ரன்களும், பிளங்கட் 9 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து வங்கதேச அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க காரணமாக இருந்தனர்.

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேசம் பேட்டிங்

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 386 ரன்கள் எடுத்து இருந்தது. வங்கதேச அணி 387 ரன்கள் என்ற மிகக் கடுமையான இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது. 28 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது.

ஷகிப் சதம்

ஷகிப் சதம்

வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் சதம் கடந்து 121 ரன்கள் சேர்த்தார். ரஹீம் 44 ரன்கள் சேர்த்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். யாரும் ரன் ரேட்டை மனதில் வைத்து விளையாடவில்லை, மாறாக விக்கெட் போகக் கூடாது என்று முடிவு செய்து தங்களால் முடிந்த அளவு இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்து ஆடினர்.

மொக்கை சேஸிங்

மொக்கை சேஸிங்

48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்கதேசம், 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி எந்த பரபரப்பும் இன்றி, மொக்கையாக சேஸிங் செய்து தோல்வியை தானே வலிய ஏற்றுக் கொண்டது.

Story first published: Sunday, June 9, 2019, 7:50 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+