For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாள் 1.. டாப் 5.. இந்தியா Vs இங்கிலாந்து முதல் டெஸ்ட்!

பர்மிங்காம் : இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும்,டி20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றிய நிலையில் 5 போட்டிகள் டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது.

டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை குவித்தது.

இப்போது முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நிகழ்ந்த டாப் 5 நிகழ்வுகளை பார்க்கலாம்

#1 1000ஆவது டெஸ்ட் போட்டி

#1 1000ஆவது டெஸ்ட் போட்டி

இப்போட்டி இங்கிலாந்து அணி பங்கு பெரும் 1000ஆவது டெஸ்ட் போட்டி. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 1000 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெறுகிறது கிரிக்கெட் போட்டிகளை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி.

 #2 ஜோ ரூட் 6000 ரன்கள்

#2 ஜோ ரூட் 6000 ரன்கள்

இந்த போட்டியில் 40 ரன்களை எடுத்த போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட். குறைந்த காலா இடைவெளியில் 6000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து 5 ஆண்டுகள் 231 நாட்களில் இச்சாதனையை புரிந்துள்ளார் என்பது சிறப்பு.

#3 சொதப்பும் மிடில் ஆர்டர்

#3 சொதப்பும் மிடில் ஆர்டர்

இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தொடர்ந்து சொதப்பி வருகிறது. நேற்றைய போட்டியில் அவர்கள் 213/3 என்ற நிலையில் இருந்து 283/9 என்ற நிலைக்கு வந்தனர். அதாவது 70 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தனர் .

#4 கோஹ்லியின் கொண்டாட்டம்

#4 கோஹ்லியின் கொண்டாட்டம்

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் விராட் கோஹ்லியின் அபாரமான பீல்டிங் திறமையால் ரன் அவுட் ஆனார். விராட் கோஹ்லி நேரிடையாக த்ரோ செய்து ரூட் விக்கெட்யை வீழ்த்தினார். அதன் பின்னர் தனது வாயில் விரல் வைத்து அதனை கொண்டாடினார். ஒருநாள் தொடரின் போது ரூட் இவ்வாறு செய்ததால் கோஹ்லி அதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. அவர் எப்பொழுதும் திருப்பி கொடுக்கும் பழக்கமுடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

#5 புறாவின் விளையாட்டு

#5 புறாவின் விளையாட்டு

நேற்றைய போட்டியின் போது களத்தின் நடுவே ஒரு புறா வந்து அமர்ந்தது. ரூட் மற்றும் ஜென்னிங்ஸ் விரட்டிய போதும் அது செல்லவில்லை. ஒருவழியாக அதனை வெளியேற்றி விட்டு போட்டியை தொடர்ந்தனர். அதன் பின்னரே இந்திய வீரர் மொஹம்மத் ஷமி விக்கெட் வீழ்த்தினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு களமிறங்கிய ஷமி 2 விக்கெட்களையும் அஸ்வின் 4 விக்கெட்களையும் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.









Story first published: Thursday, August 2, 2018, 15:07 [IST]
Other articles published on Aug 2, 2018
English summary
Top 5 moments on Day 1 - Eng vs IND
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X