
டாஸ் முடிவு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நடைபெற்று முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மாற்றங்கள்
டி20 தொடரில் இந்திய அணியின் ஓப்பனிங் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில், ஒரு நாள் போட்டியில் வழக்கமான ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடியே களமிறங்கவுள்ளது. டி20 தொடரில் அசத்திய சூர்யகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் ஹர்த்திக் பாண்டியாவுடன், அவரின் சகோதரர் க்ருணால் பாண்டியா இடம்பெற்றுள்ளார்.

ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு
இங்கிலாந்து தொடரில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என அசத்திய ரிஷப் பண்ட்க்கு பதிலாக டி20 தொடரில் தொடர்ந்து சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதே போல பந்துவீச்சில் பும்ரா இல்லாததால், அவருக்கு பதிலாக டி.நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் வீரர் பிரஷீத் கிருஷ்ணா அறிமுகமாகவுள்ளார்.

வீரர்கள்
இந்தியா : ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், பிரஷீத் கிருஷ்ணா, புவேனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ்,
இங்கிலாந்து : ஜேசன் ராய், பேர்ஸ்டோ, மோர்கன், பட்லர், ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, சாம் கரண், டாம் கரண், அடில் ரஷித், மார்க் வுட்

விராட் கோலி
டாஸ் வென்ற பின் பேசிய விராட் கோலி, முதலில் பேட்டிங் ஆடுவதில் மிக மகிழ்ச்சி. ஏனென்றால் மாலை நேர வானிலை எங்களுக்கு பந்துவீச்சுக்கு உதவும் என நினைக்கிறேன். டாப் ஆர்டரில் ரோகித், ஷிகர், கோலி, ஸ்ரேயாஸ் ஆடுகிறோம். ராகுல் 5வது வீரராக களமிறங்குவார். 2017ம் ஆண்டில் இந்த மைதானத்தில் இங்கிலாந்தை வென்றது போல் மீண்டும் வெல்வோம் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











