Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டி20ல் அலைமோதிய கூட்டம்... பொறாமையில் பொங்கிய பாகிஸ்தான் வீரர்....பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இந்திய அணி தோல்விடையந்த நிலையில், பிசிசிஐ-யை பாகிஸ்தான் வீரர் வம்பிழுத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதனால் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்காக இந்திய அணியை ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில் பாகிஸ்தான் வீரர் வேறொரு புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார்.

மோசம்

மோசம்

இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியாவில் டி20 போட்டிக்கு தனி மவுசு உள்ளதால் இப்போட்டிக்கு குறிப்பிட்ட அளவிலான ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ அனுமதி வழங்கியது. இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் ரசிகர்களுக்கு மத்தியில் டி20 போட்டி நடைபெற்றது.

குவிந்த ரசிகர்கள்

குவிந்த ரசிகர்கள்

நேற்று போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானம் 1 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானம் ஆகும். இங்கு முதல் டி20 போட்டியை காண 40, 000 டிக்கெட்கள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று 67,000 ரசிகர்களுக்கு இடையே போட்டி நடைபெற்றுள்ளது.

அமீர் யாமீன்

அமீர் யாமீன்

நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் போட்டி நடைபெற்ற மிகிழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி நிறுவன ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிரப்பட்டது. அதற்கு பதில் ட்வீட் போட்டுள்ள பாகிஸ்தான் வீரர் அமீர் யாமீன், இவ்வளவு கூட்டத்திற்கு மத்திய கொரோனா எங்கிருக்கிறது என கிண்டலா கேட்டுள்ளார். இது பலரையும் எரிச்சலாக்கியுள்ளது.

பொறாமையோ

பொறாமையோ

அமீர் யாமீன் கடைசியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி அணிக்காக ஆடினார். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக அந்த தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இப்படி கிண்டல் செய்து போட்டுள்ள ட்வீட்டுக்கு பொறாமையில் பொங்குகிறார் என இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, March 13, 2021, 13:01 [IST]
Other articles published on Mar 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+