Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரர்களை இழந்த இங்கிலாந்து... இளம் படையுடன் இந்தியா...வரலாறு கூறுவது என்ன? யாருக்கு வெற்றி?

புனே: இங்கிலாந்து - இந்தியா இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்பதால் போட்டியின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடர் இன்று புனேவில் தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளின் பாஸிட்டீவ், நெகட்டீவ் மற்றும் இன்றைய போட்டிக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.

 ஒருநாள் கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நடைபெற்று முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கடந்த தொடர்களில் பெற்ற தோல்விகளுக்கு பழிவாங்க வேண்டும் என இங்கிலாந்தும், அட்டகாசமான இளம் படையுடன் உள்ள இந்திய அணியும் உள்ளதால் போட்டிக்கான விறுவிறுப்பு கூடியுள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்த அணியில் முக்கிய பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக பங்குபெறவில்லை. அதே போல அணியின் முக்கிய கீ ப்ளேயரான ஜோ ரூட் இடம்பெறவில்லை. இதனால் மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ் ஆகியோர் பேட்டிங் லைன் அப்பில் உதவுவார்கள். இதுகுறித்து பேசிய கேப்டன் மோர்கன், டி20 தொடரில் இங்கிலாந்து அணியில் 12 வீரர்களுக்கே வாய்ப்பளித்தோம். எனவே டி20 தொடரில் வாய்ப்பு பெறாத ஒரு நாள் போட்டியில் இதுவரை பெரிதாக வாய்ப்பு பெறாத வீரர்கள் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா

இந்தியா

இந்திய அணியை பொறுத்தவரை ஓப்பனிங்கில் ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஜோடி தான் என்பது கிட்டத்தட்ட கோலி உறுதி செய்துவிட்டார். அதே போல, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், பண்ட், வாசிங்டன் சுந்தர், சிராஜ், நடராஜன் உள்ளிட்ட இளம் படையுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. டி20 போட்டியில் கிடைத்த வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதால் ஒரு நாள் தொடரில் ப்ளேயின் 11ல் நிச்சயம் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளின் அனுபவம்

இரு அணிகளின் அனுபவம்

2019ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். 2019 உலகக்கோப்பையில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. இரு அணிகளும் இதற்கு முன்னர் புனே மைதானத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. கடந்த 2017ல் முதல் முறையாக அங்கு இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பைக்கு பிறகு இரு அணிகளும் விளையாடிய ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி 7 வெற்றிகளும் இங்கிலாந்து 4 வெற்றிகளும் பெற்றுள்ளது. எனவே இரு அணிக்கும் இன்று பாதிக்கு பாதி வெற்றி வாய்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, March 23, 2021, 23:08 [IST]
Other articles published on Mar 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+