Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க வாய்ப்பே கொடுக்கவில்லை.... 2வது ஒருநாள் போட்டி தோல்வி...கேப்டன் விராட் கோலி விளக்கம்!

புனே: 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோர் அடித்த போது ஏன் தோற்றது என கேப்டன் கோலி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெரிய இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க உதவிய பென் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ பார்ட்னர்ஷிப் குறித்து விராட் கோலி ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

 2வது போட்டி

2வது போட்டி

இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 1 -0 என முன்னிலை வகித்த நிலையில் நேற்று 2வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி (66), கே.எல்.ராகுல் (108), ரிஷப் பண்ட் (77) ரன்களை குவிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

முதல் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் இருந்த இலக்கை இங்கிலாந்து எட்ட முடியாதபடி இந்திய அணி சுலபமாக கட்டுப்படுத்தியது. ஆனால் 2வது போட்டியில் அப்படியே அதற்கு மாறாக நடைபெற்றது. 337 என்ற ஸ்கோரை 43.3 ஓவர்களில் எட்டி இங்கிலாந்து அசத்தியது. இதற்கு இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ - பென் ஸ்டோக்ஸ் பார்டனர்ஷிப் முக்கிய காரணமாக அமைந்தது.

 அதிரடி பார்ட்னர்ஷிப்

அதிரடி பார்ட்னர்ஷிப்

முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவரும் சேர்ந்து 119 பந்துகளில் 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தமர். சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ், 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ 112 பந்துகளில் 124 ரன்களை எடுத்தார். இவர்களின் ஆட்டத்தால் இங்கிலாந்து சுலபமாக வெற்றி பெற்றது.

கோலி விளக்கம்

கோலி விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்த விராட் கோலி, நாங்கள் முதல் போட்டியை போன்று நல்ல இலக்கை தான் கொடுத்தோம். ஆனால் பென் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ பார்ட்னர்ஷிப் எங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. இதுபோன்ற பார்ட்னர்ஷிப்பை இதுவரை நான் பார்த்ததில்லை. சிறந்த ஷாட்களை அவர்களிடம் பார்க்க முடிந்தது என தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

தொடக்கத்தில் இந்திய அணி பந்துவீச்சு பந்துவீச்சு நன்றாக தான் இருந்தது. ஆனால் இங்கிலாந்து ஒரு வழியை கண்டுபிடித்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது. அவர்கள் சிறப்பாக ஆடியதால் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் இந்திய அணியில் திட்டங்களை செயல்படுத்தியதில் பிரச்னை இருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் பேட்டிங் வியக்கவைத்தது என தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, March 27, 2021, 9:38 [IST]
Other articles published on Mar 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+