Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு இல்லை...ஸ்ரேயாஸ் இடத்தை நிரப்பியது யார்..2வது ஒருநாள் போட்டி அப்டேட்

புனே: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி புனேவில் தொடங்கியுள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் மோர்கன் இல்லாததால் ஜாஸ் பட்லர் கேப்டனாக செயல்படவுள்ளார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் ரசிகர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

டாஸ்

டாஸ்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்டு ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று புனேவில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

முதல் ஒருநாள் போட்டியில் காயத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தொடரில் இருந்து முற்றிலும் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இதற்கு ஒருபுறம் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தாலும், இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவரின் வருகை இந்தியாவுக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது. இதே போல் முதல் போட்டியில் காயமடைந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

அணி விரர்கள்

அணி விரர்கள்

இந்திய அணி : ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரஷித் கிருஷ்ணா

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜாஸ் பட்லர், லிவ்விங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், டாம் கரண், அடில் ரஷித், ரீசி டாப்ளே

கோலி விளக்கம்:

கோலி விளக்கம்:

டாஸ் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நாங்கள் முதலில் பேட்டிங் ஆட தான் யோசித்திருந்தோம். முதல் போட்டியை போன்றே சூழல் உள்ளது. எனவே முதலில் விளையாடி அதிக ரன்களை குவிக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த போட்டியை விட இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.

Story first published: Friday, March 26, 2021, 13:55 [IST]
Other articles published on Mar 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+