
பந்துவீச்சு
முதல் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு சென்னை பிட்ச் முக்கிய காரணமாக இருந்தது. சென்னை பிட்ச் முதல் 3 நாட்களுக்கு சிறிதளவு கூட டேர்னிங் ஆகவில்லை. இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது.

பிட்ச்
இன்றைய போட்டியில் முதல் பந்து முதலே நல்ல ஸ்விங்கிங் உள்ளது. முதல் டெஸ்டில் நடந்தது போல இது செம்மண் பிட்சாக இல்லாமல் களிமண் சேர்க்கப்பட்டு பந்துவீச்சுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ முடிவு
முதல் டெஸ்டின் விமர்சனங்களுக்கு பிறகு, 2வது டெஸ்டில் டாஸ் வெல்வது மிக முக்கியமான பங்காக இருக்க வேண்டும் என பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதன் காரணமாகவே பிட்ச் மாற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பந்தின் டேர்னிங்
முன்னதாக பிட்ச் குறித்து பேசிய இந்திய அணி துணை கேப்டன் ரஹானே, சென்னை ஆடுகளம் மிகவும் வித்தியாசமானதாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது முதல் நாள் முதலே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவும் எனவும் முதல் இன்னிங்சை பொறுத்து ஆட்டத்தை எடுத்து செல்வோம் எனவும் தெரிவித்திருந்தார்.

விக்கெட்டுகள்
டாஸ் வென்று பேட்டிங் ஆடி வரும் இந்திய அணியில் ரோகித் ஷர்மா மட்டுமே நிலைத்து நின்று 80 ரன்களை தாண்டி ஆடி வருகிறார். மறுபுறம் அடுத்தடுத்து 3 விகெட்டுகள் சரிந்து இந்திய அணி 106 ரன்களை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











