புஜாராவை காணோம்... பதற்றமடைந்த ரசிகர்கள்... 2வது இன்னிங்சில் நடப்பது என்ன?
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் புஜாராவின் உடல்நிலையால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் இன்னிங்சில் ரோகித், பண்ட், ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. இதனையடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 134 ரன்களுக்கு சுருண்டது.
இந்நிலையில் போட்டியில் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணிக்கு புஜாராவின் காயம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

காயம்
இங்கிலாந்துடனான போட்டியில் 58 பந்துகளை சந்தித்த புஜாரா 21 ரன்களை மட்டுமே எடுத்தார். அப்போது அவரின் வலது கையில் பந்து பலமாக பட்டதால் அவருக்கு பேட்டிங்கில் திணறல் ஏற்பட்டது.

எப்போது
நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு பல்வேறு அடிகள் உடலில் விழுந்தன. இருப்பினும் அவர் அப்போது அடித்த அரை சதம் அணியின் வெற்றிக்கு உதவியது.

ஃபீல்டிங்கில் இல்லை
காயம் காரணமாக புஜாரா இன்றைய ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்யவில்லை. மைதானத்தில் அவரை காண முடியாததால் 2வது இன்னிங்சில் அவர் பங்கேற்பாரா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

நிம்மதி
எனினும் வலியில் இருந்து மீண்டு புஜாரா 2வது இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறார். 18 பந்துகளை சந்தித்துள்ள அவர் இதுவரை 7 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். இந்திய அணி 54 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.


Click it and Unblock the Notifications