Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னைக்கு ராகுல்னா, நாளை இஷான்.. இப்படிலாம் பார்த்தா நல்ல டீம் இருக்காது....முன்னாள் வீரர் பளார்!

அகமதாபாத்: கே.எல்.ராகுல் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் முன்னாள் வீரர் ஒருவர் சரமாரி அடிக்கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதற்கான இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் கே.எல்.ராகுல் இன்றைய இந்திய அணியில் இடம்பெற கூடாது என கூறி வரும் விமர்சகர்களுக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

டி20 போட்டி

டி20 போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரில் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. முதல் 2 போட்டிகளில் இந்திய அணியின் ஓப்பனிங்கில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. ஷிகர் தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்க வேண்டும் என்றும் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் இருக்கும் எனவும் அனைவரும் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 போட்டிகளிலும் கே.எல்.ராகுல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

விமர்சனம்

விமர்சனம்

முதல் டி20 போட்டியில் 4 பந்துகளை சந்தித்த ராகுல் 1 ரன்னை மட்டுமே எடுத்து வெளியேறினார். 2வது போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் டக் அவுட்டாகி அவர் மீண்டும் ஏமாற்றமளித்தார். இதனால் 3வது டி20 போட்டியில் அவருக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பதிலடி

பதிலடி

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஒரு சிறந்த வீரர் வெறும் 2 போட்டிகளில் சரியாக ஆடவில்லை எனக்கூறி கேள்வி எழுப்பினால், உலகக்கோப்பைக்கான சிறந்த இந்திய அணி உருவாகாது. இன்றைக்கு ராகுல் என்றால், நாளை இஷான் கிஷான், நாளை மறுநாள் பண்ட் பிறகு வேறு ஒருவர் என ஒரு நிரந்திரம் இல்லாத அணியாக மாறும் என தெரிவித்துள்ளார்.

ஆட்டம்

ஆட்டம்

28 வயதாகும் கே.எல்.ராகுல் இதுவரை 46 டி20 போட்டிகளில் ஆடி 1,543 ரன்களை எடுத்துள்ளார்.. இதில் 2 சதங்களும், 14 அரை சதங்களும் அடங்கும். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 146.7 ஆகும். ஐபிஎல்-ல் கடந்த சீசன் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் கே.எல்.ராகுல். எனவே இப்படிப்பட்ட வீரர் 2 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக உட்கார வைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 3வது டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Story first published: Tuesday, March 16, 2021, 17:29 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+