Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாட்டிங்காமில் 3வது டெஸ்ட்.. இந்தியாவின் வாய்ப்பு எப்படி.. ஒரு அலசல்!

நாட்டிங்காம் : இந்திய இங்கிலாந்து அணிகளிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் நடைபெறவிருக்கிறது.

தொடர் தோல்வியை தவிர்க்குமா இந்தியா:

தொடர் தோல்வியை தவிர்க்குமா இந்தியா:

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கடுமையான சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளத்தின் தன்மை:

ஆடுகளத்தின் தன்மை:

எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் வேகபந்துவீச்சாளர் களுக்கு சாதகமாகவே அமையும். இங்கு இந்திய அணி இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து அணி :

இங்கிலாந்து அணி :

இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது. நம்பர் 1 டெஸ்ட் அணியையே தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியுடன் இணைந்துள்ளது அவர்களுக்கு கூடுதல் பலமாகும். இங்கிலாந்து அணி சாம் கர்ரனுக்கு பதிலாக ஸ்டோக்ஸ் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி விவரம் :

இங்கிலாந்து அணி விவரம் :

குக்,ஜென்னிங்ஸ், ரூட்,ஒல்லி போப்,பைர்ஸ்டாவ், ஸ்டோக்ஸ், பட்லர்,வோக்ஸ்,ரஷீத்,பிராட்,ஆண்டர்சன்

இந்திய அணி :

இந்திய அணி :

இந்திய அணி இந்த தொடரில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது கவலையளிக்கக்கூடிய விஷயமாகும். கேப்டன் விராட் கோஹ்லியை தவிர வேறு ஒருவரும் சரியாக பேட்டிங் திறமையை வெளிப்படுத்த வில்லை. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முதல் 10 ஓவர்களுக்குள் தங்களது விக்கெட்களை இழப்பது பின்னடைவாகும்.

இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது கட்டாயமாகும். தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பண்டை களமிறக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து குறைந்த ரன்களையே எடுத்து வரும் விஜய்க்கு பதிலாக தவான் மீண்டும் களமிறக்கப்படலாம்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக பும்ரா களமிறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணி தொடர் தோல்வியை தவிர்க்கலாம்.

காத்திருக்கும் சாதனைகள் :

காத்திருக்கும் சாதனைகள் :

ஸ்டுவர்ட் ப்ராட் இன்னும் 12 ரன்களை எடுத்தால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 300+ விக்கெட்களை வீழ்த்திய 9ஆவது வீரர் என்ற பெருமையினை பெறுவார். ஜோஸ் பட்லர் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடக்க இன்னும் 30 ரன்கள் மட்டுமே தேவை. அவர் 1000 ரன்களை எடுத்தால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து விதமான போட்டிகளிலும் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இந்தியாவின் அஜிங்க்யா ரஹானே டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களை கடக்க











Story first published: Saturday, August 18, 2018, 11:30 [IST]
Other articles published on Aug 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+