இந்திய வீரர் ரிஷப் பந்த்தைப் பார்த்து "கய்யா முய்யா" பேச்சு.. பிராடுக்கு 15% அபராதம்!
Recommended Video

பிராடுக்கு 15% அபராதம்! ராகுலின் டெலி அல்லி கொண்டாட்டம்- வீடியோ
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது வெளியேறியபோது பிராட் கோபமாக அவரை பார்த்து ஏதோ கூறினார். ஐசிசி நடத்தை விதிமுறைகளின் படி இது ஒரு நடத்தை விதி மீறல் ஆகும்.

ஐசிசி நடத்தை விதிமுறைகள் 2.1.7ன் கீழ்,இங்கிலாந்து வீரர் பிராட் தவறிழைத்தது உறுதி செய்யப்பட்டது. அதன் படி போட்டியின் போது ஒரு வீரர் ஆட்டமிழந்தது வெளியேறினால் அவரை நோக்கி ஆக்ரோஷமாக பேசுவது அல்லது செய்கைகள் காண்பிப்பது லெவல் 1 குற்றமாகும்.
இதனால் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஒரு தகுதிகுறைவு புள்ளியும் வழங்கப்பட்டது. அவர் இது போன்றதொரு தவறிழைப்பது இதுவே முதல் முறை. அவர் இன்னொரு தகுதி குறைவு புள்ளியை பெற்றால் அவரால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, August 22, 2018, 9:26 [IST]
Other articles published on Aug 22, 2018


Click it and Unblock the Notifications