
1 எதிர்பாராத ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்
முதல் இரண்டு போட்யிகளில் சொதப்பிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டிங் இந்த போட்டியில் சிறப்பாக அமைந்தது. அத்துடன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு சரியாக 60 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரேயளவு ரன்களை குவித்த பார்ட்னெர்ஷிப்பில் இது மூன்றாமிடம் பிடித்தது.

2 கபில்தேவ் மற்றும் பாண்டியா
என்னை கபில் தேவ் உடன் ஒப்பிடாதீர்கள் என்று பாண்டியா மற்றவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தாலும் கூட புள்ளிவிபரங்கள் அவரை சுற்றி வருவது குறிப்பிடதக்கது. அவ்வகையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாண்டியா 500 ரன்களை கடந்தார். இது அவரது 10ஆவது டெஸ்ட் போட்டியாகும். கபில் தேவ் அவர்களும் தனது 500ஆவது ரன்னை அவரது 10ஆவது டெஸ்ட் போட்டியில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

3 விராட் கோஹ்லியின் 200 ரன்கள்
விராட் கோஹ்லி மூன்றாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 97 மற்றும் 103 ரன்களை எடுத்தார். இதன் கூடுதல் 200 ரன்கள் ஆகும். அவர் முதலாவது போட்டியில் 149 மற்றும் 51 ரன்களை எடுத்தார். அதன் கூடுதல் 200 என்பது சிறப்பு. யாரும் எதிர்பாராத வகையில் முதலாவது மற்றும் மூன்றாவது போட்டியில் சரியாக 200 ரன்களை எடுத்துள்ளார்

4 சச்சின் மற்றும் கோஹ்லி
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தங்களது 58ஆவது சதத்தை இங்கிலாந்து அணிக்கெதிராக எடுத்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் சரியாக 197 பந்துகளில் 103 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். சச்சின் சாதனைகளை முறியடிக்க விராட் கோஹ்லிக்கு இன்னும் 42 சதங்கள் தேவை.


Click it and Unblock the Notifications