Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் பந்தில் இருந்தே காட்டடி..எதிரணியை வாய்ப்பிளக்க செய்த சூர்யகுமார்..இங்கிலாந்துக்கு கடின இலக்கு

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடியால் இங்கிலாந்து அணிக்கு கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

சர்ச்சையை ஏற்படுத்திய Surya Kumar Yadav விக்கெட்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அட்டகாசமான அட்டத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்துள்ளது.

4வது டி20 போட்டி

4வது டி20 போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இங்கிலாந்து 2 -1 என முன்னிலை வகிக்கிறது. இதனால் இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தில் 4வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் கடந்த 3 போட்டிகளிலும் சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே போல இஷானுக்கு பதில் சூர்யகுமார் யாதவும், சஹாலுக்கு பதிலாக ராகுல் சஹாரும் சேர்க்கப்பட்டனர்.

பேட்டிங்

பேட்டிங்

போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களுக்கு ஆர்ச்சர் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து முதல் விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சர்வதேச டி20 போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் போட்டியிலேயே அவர் சிக்ஸர் அடித்து அனைவரையும் அசரடித்தார்.

அதிரடி

அதிரடி

பின்னர் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். இவர்களின் பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி 7 ஓவர்களில் 60 ரன்களை எட்டியது. ஆனால் களத்தில் செட்டாகி வந்த ராகுல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி அடில் ரஷித் பந்துவீச்சில் 1 ரன்னுக்கு வெளியேறினார்.

தனி ஒருவர்

தனி ஒருவர்

அடுத்தடுத்து விக்கெட்களை இழ்ந்து தடுமாறிய போது மறு முனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இது சர்வதேச போட்டியில் அவர் அடிக்கும் முதல் அரை சதமாகும். சிறப்பாக ஆடி வந்த அவர் 57 ரன்கள் அடித்தார். பின்னர் பண்ட், ஸ்ரேயாஸ் அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் 4 விக்கெட்களை எடுத்தார்.

Story first published: Thursday, March 18, 2021, 21:22 [IST]
Other articles published on Mar 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+