For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த அணி ஜெயிக்கத்தான் வாய்ப்பு அதிகமாம்.....ரெக்கார்ட்ஸ் சொல்லுது....5வது டி20யின் சுவாரஸ்யங்கள்!

அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில் கடந்த கால ரெக்கார்ட்களை வைத்து எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - காரணத்தை சொன்ன Virat Kohli | Oneindia tamil

இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 2 -2 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி டி20 இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இதற்கு முந்தைய ரெக்கார்ட்களை வைத்து பார்த்தபோது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரிகிறது.

டி20 தொடர்

டி20 தொடர்

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் படு மோசமாக இழந்த இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றே தீர்வோம் என விடாப்படியாக உள்ளது. ஆனால் இந்திய அணியும், நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கடும் போட்டி கொடுத்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 4 டி20 போட்டிகளில முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் 4வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது போட்டி இன்று நடைபெறுகிறது.

 இதற்கு முன்னர் வரை

இதற்கு முன்னர் வரை

கோலி தலைமையிலான இந்திய அணி சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் எதுவும் வெல்லா விட்டாலும், மற்ற அணிகளுடனான தொடர்களில் மிகவும் பலமான ஒன்றாக உள்ளது. இந்திய அணி இங்கிலாந்து தொடருக்கு முன்னர் ஆடிய 7 தொடர்களில் 6ல் வெற்றியும் ஒன்றை சமனும் செய்துள்ளது. இதில் கடைசி 5 தொடர்களிலும் தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை இழந்தது தான் இந்திய அணியின் கடைசி தோல்வியாகும்.

இங்கிலாந்து வரலாறு

இங்கிலாந்து வரலாறு

இங்கிலாந்து அணியும் டி20 போட்டியில் மிகுந்த பலம் வாய்ந்த அணியாகும். இந்த அணி கடைசியாக ஆடிய 7 டி20 தொடர்களில் ஒன்றில் கூட தோல்வி பெறவில்லை. ஒரே ஒரு தொடர் மட்டும் சமனில் முடிவடைந்தது. கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரை இழந்ததே இங்கிலாந்து அணியின் கடைசிய் தோல்வியாகும். எனவே இந்த தொடரை வெல்ல கடுமையாக போராடக்கூடும்.

இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளபோதும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு பிறகு, 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டி20 தொடரில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டிகளில் இந்திய அணி 9 முறை ஆடியுள்ளது. இதில் 8 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஒரே ஒரு முறை மட்டும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி அது போன்ற 6 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் அவை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, March 20, 2021, 15:38 [IST]
Other articles published on Mar 20, 2021
English summary
ENG vs IND 5th t20: History shows that kohli and co.start favourites to win series against England team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+