Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு தலைவலி.. 3வது டெஸ்ட் போட்டி.. அதிரடி வீரர்களை களமிறக்கும் இங்கிலாந்து - முழு விவரம்!

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்காக முக்கிய வீரர்களை மீண்டும் அணிக்கு வரவழைத்துள்ளது இங்கிலாந்து அணி.

Recommended Video

IND vs ENG 3rd Test: England Squad Announced | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இறுதி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி சொல்லி வைத்து ஒவ்வொரு வீரராக தூக்கி லார்ட்ஸ் மைதானத்தில் தனது 3வது டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.

படு தோல்வி

படு தோல்வி

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு சுருண்டது. இதற்கு காரணம் 2வது இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட் போட்ட தவறான கணக்கு தான். விக்கெட் எடுக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு பும்ராவை பழிவாங்கும் திட்டத்தை போட்டார். இந்த அதீத நம்பிக்கையே அவர்களுக்கு வினையாக அமைந்தது.

 கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியே தோல்வியை சந்தித்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அணி வீரர்களை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக கேப்டன் ஜோ ரூட் படு மோசமாக விமர்சிக்கப்படுகிறார். இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.

பேட்டிங் வரிசையில் சிக்கல்

பேட்டிங் வரிசையில் சிக்கல்

ஆனால் அதில் பெரும் சிக்கல் உள்ளது. இங்கிலாந்து அணியின் பவுலிங் ஓரளவுக்கு இருந்த போதும், பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் பவுலிங்கில் ஆண்டர்சன் தவிர யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட புதிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி மாற்றங்கள்

அதிரடி மாற்றங்கள்

கடந்த டெஸ்ட் போட்டியில் மோசமாக சொதப்பிய டாம் சிப்லே, ஜேக் க்ராவ்லே ஆகியோர் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 3வது போட்டிக்காக இங்கிலாந்து டெஸ்ட் அணியில், நட்சத்திர வீரரான டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இது தவிர ஷாகிப் மஹ்மூத், க்ராய்க் ஓவர்டன், ஹசீப் ஹமீத் போன்ற வீரர்களும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஷாகிப் மஹ்மூத் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.

மார்க் வுட் காயம்

மார்க் வுட் காயம்

இங்கிலாந்து அணியில் இருந்த நட்சத்திர பவுலர் மார்க் வுட் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். 2வது டெஸ்ட்டில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனவே அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான். அதன் காரணமாகவே ஷாகிப் மஹ்மூத் வரவழைக்கப்பட்டுள்ளார். இதே போல டேவிட் மாலன் வரவழைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு தனி காரணம் உண்டு.

மாலன்

மாலன்

3வது டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கும் ஹெட்டிங்க்லே மைதானம், மாலன் கவுண்டி அணிக்காக பிட்ச் ஆகும். எனவே இங்கு அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் நல்ல ஃபார்மிலும் உள்ளார். கடைசியாக ஜூன் மாதத்தில் நடைபெற்ற முதல் தர போட்டியில் 199 ரன்களை விளாசியிருந்தார்.

இங்கிலாந்து அணி;

இங்கிலாந்து அணி;

ஜோ ரூட் (கேப்டன்), மொய்ன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கர்ரான், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஷாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், க்ராய்க் ஓவர்டன், ஓலி போப், ஓலி ராபின்சன், மார்க் வுட்.

Story first published: Thursday, August 19, 2021, 14:19 [IST]
Other articles published on Aug 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+