Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினும் விராட் கோலியும் ஒன்னுதான்.. எந்த விஷயத்தில் தெரியுமா... நியாபகங்களை பகிர்ந்துகொண்ட சேவாக்

அகமதாபாத்: கேப்டன் கோலிக்கும் சச்சின் டெண்டுல்கரும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரி இருப்பதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கேப்டன் கோலியின் ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் கேப்டன் கோலிக்கும் முன்னாள் வீரர் சச்சினுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

கேப்டன் கோலி

கேப்டன் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 73 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு மேட்ச் வின்னிங் ஸ்கோர் அடித்து கோலி அசரவைத்தார். இவர் மொத்தம் 81 டி20 இன்னிங்ஸ்களில் களமிறங்கி உள்ள கோலி, 22 முறை அவுட் ஆகாமல் களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

கற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொள்ள வேண்டும்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அமைத்துவிட்டால் இறுதி வரை களத்தில் நின்று ரன் குவிப்பார். இதுதான் அவரின் ஸ்பெஷல்.

சரியான தொடக்கம் கிடைத்தவுடன் அதனை எப்படி பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்பதை இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் அஜேய் ஜடேஜா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதையே தான் சச்சினும்செய்வார் எனத் தெரிவித்தார்.

 சச்சின்

சச்சின்

சச்சின் டெண்டுல்கர் நல்ல அடித்தளம் கிடைத்துவிட்டால் அதைப் பெரிய ஸ்கோராக மாற்றிவிடுவார். சச்சின் என்னிடம் அடிக்கடி ஒன்றை கூறுவார். அது நாளை சூழ்நிலை எப்படி இருக்கும் எனத் தெரியாது எனவே இன்றே சிறப்பாக விளையாடிக்கொள்ள வேண்டும் என கூறுவார். அதனை இப்போது விராட் கோலி இதைச் செய்து வருகிறார். என சேவாக் தெரிவித்தார்.

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் இந்திய அணியில் பெரியளவில் மாற்றம் ஏதும் இருக்காது எனப்படுகிறது. எனினும் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரோகித் சர்மா களமிறங்குவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, March 16, 2021, 18:25 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+