For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடராஜன் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி....பிசிசிஐயும் உறுதி செஞ்சாச்சு. இனி இங்கிலாந்து தொடரில் அனல் பறக்கும்

எதிர்பார்த்திருந்த ரசிகர்கள்... என்ன சொல்லுது பிசிசிஅ

Recommended Video

5th T20யில் Natarajan Entry! BCCI உறுதி செஞ்சாச்சு | OneIndia Tamil

அகமதபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெற்றி பெற தமிழகத்தை சேர்ந்த வீரர் ஸ்பெஷலாக இந்திய அணிக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் 2 - 2 சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் தொடரை வெல்ல தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் முழு உடற்தகுதியுடன் அணிக்குள் சேர்ந்துள்ளார்.

டி20 தொடர்

டி20 தொடர்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2 -2 என சமநிலையில் உள்ளது. 5வது மற்றும் கடைசி போட்டியில் வென்று தொடரை வெல்ல கோலி அணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணி பந்துவீச்சில் பக்கா சப்போர்ட் தருவதற்காக யார்க்கர் நடராஜன் அகமதாபாத்திற்கு சென்றுள்ளார். இதனை அவர் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அசத்தல்

அசத்தல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வலைப்பந்து வீச்சாளராக சென்ற டி நடராஜன், சில வீரர்கள் காயம் அடைந்ததால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானார். அதில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அவர், அனைவரின் கவனத்தையும் பெற்றார். இதனால் அவருக்கு இங்கிலாந்து டி20 தொடரிலும் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது.

உடற்தகுதி

உடற்தகுதி

எனினும் ஆஸ்திரேலிய தொடரின் போது நடராஜனுக்கு ஏற்பட்ட தோள்பட்டை, முழங்கால் காயத்தால், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருந்தார். இதனால் 4 டி20 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர், பிசிசிஐயின் யோ யோ டெஸ்டில் தேர்ச்சியடைந்து, சில நாட்களுக்கு முன் அகமதாபாத் சென்றதாகவும், அங்கு தனிமைப்படுத்துதல் காலத்திற்கு பிறகு நேற்று அணியில் இணைந்ததாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடராஜனும் இந்திய அணியுடன் இணைந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

5வது டி20 போட்டி

5வது டி20 போட்டி

நடராஜன் தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதால் 5வது டி20-ல் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே கடைசி டி20 போட்டியில் அவர் இல்லையென்றாலும், ஒரு நாள் தொடரில் கண்டிப்பாக அணியில் பார்க்கலாம் எனக்கூறப்படுகிறது.

Story first published: Friday, March 19, 2021, 18:54 [IST]
Other articles published on Mar 19, 2021
English summary
T Natarajan Passed fitness test, and chances to join 5tht20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+