Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு ஒரு ரூல்ஸ், மற்றவர்களுக்கு ஒரு ரூல்ஸா...கோலியின் தவறான முடிவு.... சேவாக் சரமாரி கேள்வி

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் கோலிக்கு கோபத்தில் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார் சேவாக்.

Recommended Video

பெரிதாகும் Rohit Sharma ஓய்வு விவகாரம்.. Virat Kohli மீது சரமாரி கேள்வி எழுப்பிய Sehwag

நேற்று நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கோலிக்கு முன்னாள் வீரர் சேவாக் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு சாடியுள்ளார்.

மோசமான முடிவு

மோசமான முடிவு

அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே முக்கிய காரணமாய் பார்க்கப்படுகிறது.

பல்டி அடித்த கோலி

பல்டி அடித்த கோலி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, முதல் டி20 போட்டியில் விளையாடுவார் என போட்டிக்கு முன்பு விராட் கோலி தெரிவித்திருந்தார். ஆனால் டாஸ்-ன் போது ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் 3வது அல்லது 4வது போட்டியில் பங்கேற்பார் என்றும் கோலி பல்டி அடித்தார். எனவே ரோகித் சர்மா இல்லாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஃபார்மில் இருக்கும் வீரர்

ஃபார்மில் இருக்கும் வீரர்

இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் அஜய் ஜடஜே, உலகில் எந்த ஒரு பேட்ஸ்மெனும் தான், நல்ல ஃபார்மில் இருக்கும் போது ஓய்வெடுக்க வேண்டும் என விரும்பமாட்டார். தொடர்ந்து அந்த ஃபார்மை நிலைநிறுத்திக்கொள்ளவே பார்பார்கள். ஆனால் இந்திய அணியில் ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் நல்ல ஃபார்மில் இருந்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதன் விளைவு என்ன நடந்தது என்பது இதற்கு சான்று என தெரிவித்தார்.

சேவாக் காட்டம்

சேவாக் காட்டம்

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், ரோகித் சர்மாவுக்கு 2 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த விதி கேப்டன் கோலிக்கும் பொருந்தும் அல்லவா. விராட் கோலி ஏன் ஓய்வெடுத்துக்கொள்ள கூடாது. அவர் கடைசியாக எப்போது ஓய்வெடுத்தார் என எனக்கு தெரியவில்லை. கேப்டனுக்கே ஓய்வு இலையென்றால் பிறகு மற்ற வீரர்களுக்கு மட்டும் ஏன் ஓய்வு, இதனை வீரர்கள் தான் கேட்க வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, March 13, 2021, 18:31 [IST]
Other articles published on Mar 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+