Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷானுக்காக முக்கிய இடத்தை விட்டுக்கொடுத்த கோலி..... வெகுண்டெழுந்த முன்னாள் வீரர்..பலிக்காத ப்ளான்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி எடுத்த ஒரு முடிவிற்காக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கோபம் காட்டியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இஷானுக்காக கோலி செய்த வித்தியாசமான முயற்சிக்கு முன்னாள் வீரர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தோல்வி

தோல்வி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணில் கேப்டன் கோலியை தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் பல வித்தியாச சாதனைகளும் இப்போட்டியில் படைக்கப்பட்டுள்ளது.

கோலியின் மாற்றம்

கோலியின் மாற்றம்

நேற்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் இருந்த சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஓப்பனிங்கில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக கடந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கி சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் கீழே செல்ல வேண்டியதாயிற்று. 3வது இடம் விராட் கோலிதாகும். ஆனால் இஷான் சிறப்பாக ஆடியதால் தனது இடத்தை இஷானுக்காக கொடுத்துவிட்டு 4வது வீரராக களமிறங்கினார். எனினும் இஷான் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கவில்லை.

தவறு

தவறு

இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, நேற்றைய ஆட்டத்தில் ஒரு தவறு இருந்தது. அணியின் கேப்டன் விராட் கோலி சிறந்த ஃபார்மில் இருந்தார். கோலிக்கான இடம் 3 தான். ஆனால் நேற்று ஏன் 4வது வீரராக களமிறங்கினார். இஷான் கிஷான் நன்றாக ஆடினார் என்பதற்காக கோலி 4வது இடத்திற்கு சென்றது சிறந்த முடிவு அல்ல.

கோலி

கோலி

நேற்ற போட்டியில் கோலியிடம் ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆட்டம் இருந்தது. அவரருக்கு எப்படி ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பது தெரியும். முதல் 20 - 25 பந்துகளில் 20 ரன்களையே அவர் எடுத்தார். இது மிகக்குறைவுதான். எனினும் மறுமுனையில் விக்கெட் வீழுந்து கொண்டே இருந்ததால் பொறுமையாக ஆடினார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்

Story first published: Wednesday, March 17, 2021, 17:49 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+