Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்து அபார பேட்டிங்.. அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்கள்.. டென்ஷன் ஆன இங்கிலாந்து கேப்டன்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

Recommended Video

ENG vs NZ : Lord's Test-ன் Day 1 Highlights | Anderson, Broad Strikes| Leach's Concussion | #Cricket

இங்கிலாந்த வீரர் பாட்ஸ், ஆண்டர்சன் ஆகியோரின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. சாக் கிராலி பொறுப்புடன் விளையாடி 43 ரன்களும், அலெக்ஸ் லிஸ் 25 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்த நிலையில், போப் 7 ரன்களிலும், பாரிஸ்டோ 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 11 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார்.

141 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

141 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

புதிய கேப்டனாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி மேலும் 8 ரன்கள் சேர்ப்பதற்குள், அதாவது 100 ரன்களில் 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து பிராட் 9 ரன்கள், ஆண்டர்சன் 7 ரன்களும், பார்கிசனும் 8 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 141 ரன்கள் எடுத்தது.

சொதப்பிய முன்வரிசை

சொதப்பிய முன்வரிசை

இதனையடுத்து 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் வில் யங் 1 ரன்னிலும், கேப்டன் வில்லியம்சன் 15 ரன்களிலும், டாம் லாத்தம் 14 ரன்களிலும் , கான்வே 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணி 56 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தோல்வி உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.

வலுவான நிலையில் நியூசி

வலுவான நிலையில் நியூசி

அப்போது 5வது விக்கெட்டுக்கு களத்தில் ஜோடி சேர்ந்த டேரல் மிட்செல், டாம் பிளாண்டல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 236 ரன்களை சேர்த்தது. டேரல் மிட்செல் 97 ரன்களும், டாம் பிளாண்டல் 90 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

Story first published: Saturday, June 4, 2022, 7:37 [IST]
Other articles published on Jun 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+