Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தரையில் விழுந்த இங்கிலாந்து வீரர்.. சில நொடிகள் பழசை மறந்தார்.. டெஸ்ட் போட்டியில் பரபரப்பு

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் போது இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் ஃபில்டிங் செய்யும் போது ஜேக் லீச் தரையில் தாறுமாறாக விழுந்தார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Eng vs NZ 1st Test – Jack Leach suffered concussion after falling in ground

இந்தப் போட்டியின் போது, இங்கிலாந்த அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் இடம்பெற்று இருந்தார்.

ஃபில்டிங் செய்யும் போது பவுண்டரிக்கு சென்ற பந்துவீச்சை ஜேக் லீச் தடுக்க முயன்றார். அப்போது தரையில் தாறுமாறாக கீழே விழுந்து கழுத்து மற்றும் தலையில் அடிப்பட்டது. இதனையடுத்து, மருத்தவ குழு உடனடியாக மைதானத்துக்கு வந்த ஜேக் லீச்சுக்கு சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து கிரிக்கெட்டில் கொண்டு வரப்பட்ட கன்கஸன் டெஸ்ட் ஜேக் லீச்சுக்கு நிகழ்த்தப்பட்டது.

Eng vs NZ 1st Test – Jack Leach suffered concussion after falling in ground

இதில் ஜேக் லீச்சிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர் ஏதும் பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக நின்றார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அணி நிர்வகம், உடனடியாக அவரை மைதானத்தை விட்டு வெளியே அழைத்து சென்றது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஜேக் லீச் கீழே விழுந்த தாக்கம், அவருக்கு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு. அவருக்கு பதிலாக பாட்டிசன் என்ற வீரரை களமிறக்குவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது. ஜேக் லீச் விரைவில் குணமடைந்து கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார் என்று நம்புவதாகவும் இங்கிலாந்து வாரியம் கூறியுள்ளது.

Eng vs NZ 1st Test – Jack Leach suffered concussion after falling in ground
Story first published: Thursday, June 2, 2022, 23:11 [IST]
Other articles published on Jun 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+