Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs NZ: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்தா இது.. சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் வீழ்ந்த சோகம்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 28 முதல் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் எடுத்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்து இருந்த அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் 93 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 58 ரன்களும் எடுத்து இருந்தனர்.

eng vs nz england new zealand

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. அதன் பின் ஹாரி ப்ரூக் அபாரமாக ஆடினார். ஒல்லி போப் 77 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களும் எடுத்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். ப்ரூக் 171 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 499 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டி இருந்தது. ஆனால், அந்த அணி 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேன் வில்லியம்சன் 61 ரன்களும், டேரில் மிட்செல் 84 ரன்களும் எடுத்து இருந்தனர்.

இதை அடுத்து 104 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடியது இங்கிலாந்து அணி. அந்த அணி இரண்டு விக்கெட் இழந்து இந்த இலக்கை எட்டியது. அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேல் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்தார். ஜோ ரூட் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து இருந்தார்

இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் பிரைடன் கார்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். அவர் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.

Story first published: Sunday, December 1, 2024, 8:52 [IST]
Other articles published on Dec 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+