Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த நாட்டில் கெஞ்சிக் கூத்தாடும் இங்கிலாந்து ரசிகர்கள்.. கொள்ளை லாபம் வைத்து விற்கும் இந்தியர்கள்!

Recommended Video

ENG vs NZ Cricket World cup 2019 | சொந்த நாட்டில் கெஞ்சிக் கூத்தாடும் இங்கிலாந்து ரசிகர்கள்

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியை காண டிக்கெட் கிடைக்காமல் இரு நாட்டு ரசிகர்களும் கெஞ்சிக் கூத்தாடும் நிலை நிலவுகிறது. இதற்கு காரணம், இந்திய ரசிகர்கள் தான் எனவும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

இங்கிலாந்து அணி சுமார் 27 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் மோத உள்ளது. எனவே, இங்கிலாந்து ரசிகர்கள் இறுதிப் போட்டியை காண மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

நியூசிலாந்து ரசிகர்கள் நிலை

நியூசிலாந்து ரசிகர்கள் நிலை

நியூசிலாந்து ரசிகர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இங்கிலாந்தில் இருந்தாலும், அவர்களும் இறுதிப் போட்டியில் தங்கள் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், இரு நாட்டு ரசிகர்களுக்கும் அதிக அளவில் டிக்கெட் கிடைக்கவில்லை.

கெஞ்சி கேட்கும் ரசிகர்கள்

பல ரசிகர்கள் மைதான வாசலில் போட்டிக்கு முந்தைய நாள் முதல் டிக்கெட் கேட்டு கையில் பதாகை ஏந்தி பரிதாபமாக காத்திருந்தார்கள். இங்கிலாந்து ரசிகர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே இப்படி நின்றது தான் மிகவும் கொடுமை. இந்த நிலைக்கு காரணம் இந்திய ரசிகர்கள் தான் என புகார் கூறப்படுகிறது.

காரணம் இந்திய ரசிகர்கள்

இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என கருதிய இந்திய ரசிகர்கள், கடந்த மாதங்களிலேயே முன்பதிவு செய்து இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை அதிக அளவில் வாங்கி உள்ளனர். சுமார் 30-40 சதவீத இறுதிப் போட்டி டிக்கெட்கள் இந்திய ரசிகர்கள் வசம் உள்ளது.

அநியாய விலை

டிக்கெட்களை வாங்கிய விலைக்கே மறுவிற்பனை செய்ய ஐசிசி சேவை வழங்கி வருகிறது. ஆனால், இதில் இந்திய ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டை விற்க விரும்பாமல், அதிக விலை வைத்து விற்று வருவதாக கூறப்படுகிறது.

பல லட்சம்

பல லட்சம்

சுமார் ரூ.12,000 முதல் 25,000 வரை விலை உள்ள டிக்கெட்களை நான்கு லட்சம் ரூபாய் வரை விலை வைத்து சட்டத்திற்கு புறம்பாக விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய ரசிகர்கள் மட்டும் தான் இதை செய்கிறார்களா? என கூற முடியாவிட்டாலும், இந்தியர்கள் தான் அதிகமாக இப்படி விற்கிறார்கள் என கூறப்படுகிறது.

Story first published: Sunday, July 14, 2019, 17:17 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+